close

பொங்கல் விழா நிகழ்வுகள்

பொங்கல் விழா நிகழ்வுகள்

உமரிக்காடு பொங்கல் சிறப்பு கபடி போட்டி – ஜனவரி 2023

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு ஊரில் பொங்கல் விளையாட்டு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது அதில் இளைஞர் கபடி போட்டியில் இரு அணிகள் மோதியது.

அதில் அணியின் பெயர்கள் முறையே Lion Boys மற்றும் Bullet Boys. இரு அணி வீரர்களும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இறுதியில் Lion Boys அணியினர், Bullet Boys அணியின் சார்பாக கபடி பாடி வந்த ஆட்டக்காரரை பிடித்து விட்டார்கள்.

ஆனால் நேர்மாறாக பிடிபட்ட வீரருக்கான Bullet Boys அணியினருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது. இது போன்ற செயல்கள் நேர்மையாக நடத்தப்படும் ஆட்டத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. மேலும் இது போன்ற ஒருதலைப்பட்சமான தவறான செயல்பாடுகள் நேர்மையாக நடத்தப்பட வேண்டிய விளையாட்டு போட்டிகளை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஊர் மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

read more
பொங்கல் விழா நிகழ்வுகள்

உமரிக்காடு பொங்கல் விளையாட்டு விழா அழைப்பிதழ் – ஜனவரி 2023

Umarikadu Pongal Sports Festival Invitation 2023 - Page1

உமரிக்காடு , ஜன 10-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காடு கிராமத்தில் 2023ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் காமராஜர் இளைஞர் அணி சார்பில் நடைபெறவிருக்கும் மாபெரும் பொங்கல் பெருவிழா சிறப்பு விளையாட்டு போட்டி வரும் ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசினை அள்ளுங்கள்.

உமரிக்காடு ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு , பெண்கள், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், திருமணமானவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு என பிரத்யேமாக நடத்தப்படயிருக்கின்றன.

அதேபோல் பெண்களுக்கான சிறப்பு கோலப்போட்டி, சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், கோழி பொறுக்குதல், பலூன் உடைத்தல், பாட்டில் நீர் நிரப்புதல், லெமன் ஸ்பூன், கபாடி, இறகுப்பந்து, கிரிக்கெட், மினி மாரத்தான், கயிறு இழுத்தல், உறி அடித்தல், இசை நாற்காலி, அதிர்ஷ்டவட்டம் உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கவும், கண்டு மகிழவும் மக்கள் அனைவரும் திரண்டு வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் நன்கொடை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஓர் பொதுமக்கள் மற்றும் நிர்வாக கமிட்டி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி வணக்கம்!

read more