close

சமுதாய செய்திகள்

சமுதாய செய்திகள்

நாடார் மகாஜன சங்க உருவாக்கத்தில் பொறையார் கம்பெனி எஸ்டேட் பங்கு

Nadar Mahaja Sangam Members Met in Poraiyar Company Garden at 1910

நாடார்கள் பெருமை வாய்ந்த க்ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழித் வந்தவர்களே நாடார்கள்.

பொறையார் நாடார்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒரு நல்லுறவைப் பேணி வந்ததாலும், சமூகத்தில் அவர்களின் பிரபுத்துவ அந்தஸ்தின் காரணமாகவும், பொறையார் நாடார் எஸ்டேட்டை  சேர்ந்த ஜமீன்தார் தவசுமுத்து நாடாரின் சகோதர், பொன்னுசாமி நாடார் பல கோயில்களைக் கட்டுப்படுத்தும் கும்பகோணம் தேவஸ்தானம் குழுவின் உறுப்பினராகவும், பல உயர் பதவிகளிலும் இருந்தார் . [5] [6] [7]

பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தை சேர்ந்த ரத்தினசாமி நாடார், தனது சமூகமும் தன்னை போன்று வளர வேண்டும் என விரும்பினார்.

சட்டமன்றத்தில் நாடார் சமூகத்தின் நேரடி பிரதிநிதித்துவம் மட்டுமே சமூகத்தின் நலன்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அறிந்து இருந்தார் ரத்தினசாமி நாடார்.

ஒரு “நாட்டுகோட்டை செட்டியார்” தனது சாதியின் பிரதிநிதியாக சட்டசபையில் இடம்பெற்று உள்ளதை போல், தன்னை நாடார் சமூகத்தின் பிரதிநிதியாக சட்டசபைக்கு பரிந்துரைக்குமாறு ரத்தினஸ்வாமி நாடார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த நாட்டுகோட்டை செட்டி, ஒரு செட்டியார் சங்கத்தின் பிரதிநிதி என்றும், நாடார்களின் பிரதிநிதியாக ஒருவரை பரிந்துரைக்க நாடார்களுக்கு சங்கம் இல்லையே என்று அரசு ரத்தினசாமி நாடாருக்கு பதில் அனுப்பியது.

ரத்தினஸ்வாமி நாடார் மற்ற அனைத்து நாடார் தலைவர்களையும் தனது இல்லமான கும்பினி தோட்டத்திற்கு அழைத்து, சங்கம் அமைப்பது குறித்து விவாதித்தார்.

அவர் தென்னகம் முழுவதும் ஆட்களை அனுப்பி, நாடார் சமூகத்தை வலுப்படுத்த ஒரு சங்கம் அவசியம் என்ற  விழிப்புணர்வைப் ஏற்படுத்தினர், நாடார் சமூகத்தின் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்வதற்கும், நாடார் இன மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு நாடார் மகாஜன சங்கம் தேவைஎன  நாடார்  மக்கள்ளை  உணர வைத்தார். இதற்கான அனைத்து செலவுகளையும் பொறையார் நாடார் எஸ்டேட்  கவனித்து கொண்டது .

பொறையார் நாடார் எஸ்டேட் மீது மாநிலம் முழுவதும் உள்ள நாடார்களுக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருந்தது, எனவே ரத்தினஸ்வாமி நாடார் அவர் தொடங்கத் திட்டமிட்டுள்ள சங்கத்தில் சேருமாறு கேட்டபோது, சமூகம் அவருக்கு பின்னால் கூடியது. நாடார்களுக்காக ஒரு சங்கத்தை உருவாக்குவது எளிதான காரியமல்ல. அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முன்னதாக, 1895 ஆம் ஆண்டில், பல நாடார் தலைவர்களும் வணிகர்களும் மதுரையில் ஒரு சங்கத்தை உருவாக்க கூடினர், ஆனால் அவர்களால் சங்கத்தை உருவாக்க முடியவில்லை, ஏனெனில் அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள நாடார் மக்களின் நம்பிக்கையை பெற முடியவில்லை.

ரத்தினஸ்வாமி நாடருக்கு அது நன்றக தெரியும், எனவே அவர் சவால்களை எதிர்கொள்ள நிறைய செலவு செய்தார். மேலும் அரசாங்கத்தில்  நாடார் எஸ்டேடின் செல்வாக்கும் உதவியது (மாவட்ட ஆட்சியர், நாடார் எஸ்டேடின் ஒரு மாளிகையில்தான் வசித்து வந்தார் [8] மற்றும் மெட்ராஸ் ஆளுநர் தஞ்சாவூர்  மாவட்டத்திற்கு வருகை தரும் போதெல்லாம் பொறையார் நாடார் எஸ்டேடின் வல்லம் அரண்மனை மற்றும் தரங்கம்பாடி பங்களாவில் தான் விருந்தினராக தாங்கினார்) [9].

அரசாங்கத்தின் அபிமானத்தை கொண்டுயிருந்த, பொறையார் நாடார் எஸ்டேட்டால் மட்டுமே சங்கம் உருவாக்க முடியும் என்று நாடார்கள் சமூகம் நம்பியது! மெட்ராஸ் பிரசிடென்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து 450 பிரதிநிதிகள் வந்தனர்.


1910 பிப்ரவரி 6, 7, மற்றும் 8 ஆம் தேதிகளில், நாடார் சமூகத்தின் 450 பிரதிநிதிகளுடன் பொறையாரில் மாநாடு நடைபெற்றது, மேலும் பிப்ரவரி 7, 1910 அன்று நாடார் எஸ்டேடின் இல்லமான “கம்பெனிஸ் கார்டெனில்” நாடார் மகாஜனா சங்கம் உருவானது.

நாடார் மகாஜனா சங்கத்தின் தலைவராக பொறையார் நாடார் எஸ்டேட்டை சேர்ந்த பொன்னுசாமி நாடார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டி.ரத்தினசாமி நாடார் மாநாட்டின் தலைவராகவும் 450 பிரதிநிதிகளில் 34 பேர் நிர்வாக உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பொறையார் கம்பெனிஸ் கார்டன் சங்கத்தின் தலைமையகமாக இருந்தது. [10] [11] [12]

டிசம்பர் 1910 இல், மெட்ராஸில் நடைபெற்ற சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் 750 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர், டி.ரத்தினசாமி நாடார் இரண்டாவது மாநாட்டின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

டி.ரத்தினசாமி நாடார் இரண்டாவது மாநாடு முடிந்த உடனேயே இறந்துவிட்டார், இது சங்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடார் சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.

நிறுவனர் டி.ரத்தினசாமி நாடார் இறந்த பிறகு, சங்கத்தின் தலைவர் பதவி பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்துக்கே என்று சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Nadar Mahaja Sangam Members Met in Poraiyar Company Garden at 1910
Nadar Mahaja Sangam Members Met in Poraiyar Company Garden at 1910

அதன் பின்னர், பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவியை வகிக்கின்றனர். சங்கத்தின் உறுப்பினர்களால் (தேர்தல் முலம்) தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் சங்கத்தின் அனைத்து விவகாரங்களுக்கும் பொறுப்பாவார். [13]


நாடார் சமூகத்தின் முன்னேற்றத்தில் நாடார் மகாஜன சங்கத்தின் பங்கு.

நாடார் சமூகத்தின் கல்வியில் சங்கத்தின் பங்கு:

1910 ஆம் ஆண்டில் நாடார் மகாஜன சங்கம் நிறுவப்பட்டதுதான் நாடார்களிடையே கல்வியின் மிக முக்கியமான முன்னேற்றம் என்றும், சங்கம் தொடக்கத்திலிருந்தே கல்வி தான் அதன் முதன்மை நோக்கங்களில் ஒன்றாக விளங்கியது என்றும் நாடார்களின் வரலாற்று ஆசிரியர் ராபர்ட் எல். ஹார்ட்கிரேவ், தனது புத்தகமான  “நாடார்ஸ் அப் தமிழ்நாடு” -ல் குறிப்பிட்டுள்ளார்.

சங்கத்தின் ஆரம்பகால நோக்கங்களில் ஒன்று, தேவைப்படும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதாகும். 1921 முதல், நாடார் மகாஜனா சங்கம் நாடார் மாணவர்களுக்கு உதவித்தொகை-கடன்களை வழங்குகிறது.

நாடார்கள் தங்களது கிராமங்கள் மற்றும் நகரங்களில் சொந்த பள்ளிகளை நிறுவ சங்கம் உதவியுள்ளது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் (1964 நிலவரப்படி) சுமார் 50 தொடக்கப் பள்ளிகள் சங்கத்திலிருந்து நேரடி நிதி உதவியைப் பெறுகின்றன. சிறப்பான நாடார் மாணவர்களை உயர்கல்விக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பவும் சங்கம் உதவுகிறது. [16]

சங்கம் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி நாடார் சமூகத்தின்  முன்னேற்றத்துக்கு பெருமளவில் உதவியது.

இன்று, சங்கம் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் பராமரிக்கிறது. [17] ​​ நாடார் மகாஜன சங்கத்தின் கட்டுப்பாட்டில் 8 கல்லூரிகள் உட்பட 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன:

  • நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி
  • நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி-College of Education
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரி (அவனியாபுரம், மதுரை)
  • நாடார் மகாஜன சங்கம் காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி
  • நாடார் மகாஜன சங்கம் காமராஜ் கல்வியியல் கல்லூரி (கன்னியாகுமரி)
  • நாடார் மகாஜன சங்கம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாய் அம்மால் பாலிடெக்னிக் கல்லூரி (பாவூர்ச்சத்ரம், திருநெல்வேலி)
  • நாடார் மகாஜன சங்கம் விமலா செல்லதுரை பாலிடெக்னிக் கல்லூரி (மல்லம்பாளயம், தாராபுரம், திருப்பூர் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் ஜெயராஜ் அன்னபாக்கியம் துணை மருத்துவக் கல்லூரி (ஆத்தூர் திருவட்டார் கன்னியாகுமரி மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (நாகமலை புதுக்கோட்டை, மதுரை)
  • நாடார் மகாஜன சங்கம் அன்னபாக்கியம் ஜெயராஜ் நாடார் I.T.I (மல்லம்பாளையம், தாராபுரம், திருப்பூர்)
  • நாடார் மகாஜன சங்கம் சேதுராமன் நாடார் நெல்லியம்மல் I.T.I (தாமரைக்குளம், ரெட்டாயுரானி, ராம்நாத் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் L.A.M.K. நடராஜன் I.T.I (கள்ளிக்குடி, திருமங்கலம், மதுரை மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் அய்ய வைகுண்டர் I.T.I (கள்ளிகுளம், நெல்லை மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் வி.பி.ராமலிங்க நாடார் I.T.I (பச்சயபுரம், வேம்பார், தூத்துக்குடி மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் உயர்நிலைப்பள்ளி (மெத்தலோ, திருப்புல்லாணி, ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் உயர்நிலைப்பள்ளி (அரசடிவண்டல், ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளி (மாயாகுளம், எர்வாடி, ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளி (தோப்பலகரை, பரலாச்சி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் கல்விதான் தாய் கே.எஸ்.சண்முகவேல் நாதர் நடுநிலைப்பள்ளி (சாயல்குடி, ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் தொடக்கப்பள்ளி (மெத்தலோடை, திருப்புல்லானி, ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் தொடக்கப்பள்ளி (அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் பாண்டியன் தொடக்கப்பள்ளி (அரசடிவண்டல், ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் வி.நாகராஜன் நாடார் தொடக்க மற்றும் நர்சரி பள்ளி (ரெட்டையூரானி, ராம்நாட் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சரஸ்வதி கோபாலகிருஷ்ணன் நாடார் தொடக்க மற்றும் நர்சரி பள்ளி (நாகுபில்லைத்தோபு, மதுரை மாவட்டம்)

நாடார்களின் பாதுகாவலனாக நாடார் மகாஜன சங்கம்

ங்கம், 1910 இல் நிறுவப்பட்டதிலிருந்து, நாடார் மக்களுக்கு எங்கும், எவ்விதமான கட்டுப்பாடுகளோ அவமாரியாதைகளோ நேர கூடாது இன்பதில் உறுதியாக இருந்தது.

சங்கத்தால் களத்தில் விடப்பட்ட ஒன்பது பயண முகவர்கள், தெற்கு மாவட்டங்கள் வழியாக கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு சென்று நாடார் மக்களிடம் அவர் அவர் ஊர்களில் ஒரு “உறவின்முரை” அல்லது ஒரு கிளை சங்கத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாடார்கள் ஒன்றிணைக்க பட்டனர்.

1964 ஆம் ஆண்டு நிலவரப்படி, நாடார் மகாஜன சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களில் ஏற்பட்ட தகராறுகள் தொடர்பாக சுமார் இருநூறு புகார்களைப் பெறுகிறது. இவற்றில், 150 பேர் மற்ற சாதிகளுடனான மோதல்களையும், கிட்டத்தட்ட 50 புகார்கள் நாடார்களிடைய ஏற்பட்ட தகராறும் உள்ளடக்கியது.

நாடார்களுக்கும் பிற சமூகத்தினற்கும் இடையே எழும் எந்தவொரு தகராறிலும், நாடார்கள், சங்கம் தலையிடுமாறு மனு செய்யலாம். சங்கமும் நன்கு விசாரித்து பின் நடவடிக்கை எடுக்கும்.

போலீஸ் தலையீடு மற்றும் அடுத்தடுத்த நீதிமன்ற நடவடிக்கை மூலம் மட்டுமே ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண முடியுமானால், சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும், வழக்கு முறையாக விசாரிக்கப்படுவதைப் கவனிப்பதுக்கும் சங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும்.

இது போன்ற மோதல்களில், ஆழ்ந்த சாதி விரோதங்கள் இடம்பெறவில்லை என்றால், போலீஸ் தலையீட்டைத் தவிர்க்க முடியுமானால், சங்கம் மற்ற சமூகத்தின் தலைவர்களை அணுகி பிரச்சனையின் தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்து பிரச்னையை தீர்த்துவைத்தது. 100 ஆண்டுகளை கடந்தவிட்ட நாடார் மகாஜன சங்கம், இதுபோல் பல முறை, நாடார்களின் அரணாக முன்னின்று நாடார்களுக்கு உதவியது.

அரசியல்: சட்டசபைக்கு நாடார்களின் பிரதிநிதித்துவம்

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (Montagu–Chelmsford Reforms), 1919ல் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டு பிரபு மற்றும் பிரிட்டிஷ் இந்திய அரசின் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகுவும் இணைந்து, பிரிட்டிஷ் இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்கு சுயாட்சி வழங்க, 1919ல் ஒரு அறிக்கையை தயாரித்து பிரிட்டிஷ் பேரரசுக்கு அனுப்பினர்.

இதனடிப்படையில் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது.

சீர்திருத்தங்கள் பிரகடனத்திற்கு முந்தைய ஆண்டில், அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் தேவைகளை அறியும் முயற்சியில் செயலாளர் மொன்டாகு மற்றும் வைஸ்ராய் செல்ம்ஸ்ஃபோர்ட் ஆகியோர் இந்தியக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

நாடார் சமூகத்திலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டசபைக்கு பரிந்துரைக்க ஆராயுமாறு மொன்டாகு மற்றும் செல்ம்ஸ்ஃபோர்டுக்கு மனு அனுப்பியது நாடார் மகாஜன சங்கம். ஆனால “கோரிக்கையில் எந்த அரசியல் காரணமும் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில்” கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும், சங்கத்தின் தலைவர் பொறையார் நாடார் எஸ்டேடின் வி. பொன்னுசாமி நாடார், பிராமணரல்லாத சமூகத்தின் பிற பிரதிநிதிகளுடன், மொன்டாகுவுடன் சந்தித்து சட்டசபையில் நாடார்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசினார் [19]

மொன்டாகு-செல்ம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களின் கீழ் முதல் தேர்தல்கள் 1920 நவம்பரில் நடந்தன, நீதிக் கட்சி கணிசமான பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. மீண்டும், நாடார் மகாஜன சங்கம் , நாடார் சமூகத்திலிருந்து ஒருவரை சட்டசபைக்கு பரிந்துரைக்க பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

நாடார் சமூகத்தினருக்கு சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்றவைகளில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அவைகள் குறித்து மற்ற சமூகத்தை சார்ந்த உறுப்பினர்களால் மேலவையில் சரிவர குரல் கொடுக்க முடியாது. எனவே நாடார்களின் நலன் பாதுகாக்கபட வேண்டுமென்றால் சட்டசபையில் நேரடி அங்கம் இன்றியமையாதது ஆகும். இவ்வாறு நாடார் மகாஜன சங்கம் அரசை கேட்டுக்கொண்டது. [20]

சில நாட்களுக்குப் பிறகு, ஆளுநர், நீதிக் கட்சியின் தலைவரின் பரிந்துரையின் பேரில், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக (4 ஆண்டுகள்) துணைத் தலைவராக (17 ஆண்டுகள்) இருந்த, பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 27 வயதான W. P. A. சௌந்தரபாண்டியன் நாடாரை (1893-1953) சட்டசபைக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நுழைந்த முதல் நாடார் W. P. A. சௌந்தரபாண்டியன் ஆவார்.

1920 முதல் 1937 வரை சட்டமன்றத்தில் பணியாற்றிய W. P. A. சௌந்தரபாண்டியன், தன்னை நாடார் சமூகத்தின் பிரதிநிதியாகவும், நாடார் மகாஜன சங்கத்தின் பிரதிநிதியாகவும்மே கருதினார்.

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (TMB)

நாடார் மகாஜன சங்கம் தொடங்கப்பட்டபோது, சங்கத்தின் நிறுவனர் ரத்தினசாமி நாடார், நாடார்களுக்காக ஒரு வங்கியைத் தொடங்க விரும்பினார். [21]

1920 இல், நாடார் மகாஜனா சங்கத்தின் தூத்துக்குடி மாநாட்டில், எம்.வி. சண்முகவேல் நாடார் மற்றும் ஏ.எம்.எம். சின்னாமணி நாடார், நாடார்களுக்கு ஒரு வங்கியை அமைப்பதன் அவசியத்தையும் சாத்தியங்களையும் முன்மொழிந்தனர். சபை ஒரு வங்கியைத் தொடங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

அந்த நேரத்தில், டி.வி.பாலகுருசாமி நாடார் பொறையார் நாடார் எஸ்டேடின் தலைவராக இருந்தார், அவர் நாடார் மகாஜன சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

நாடார் எஸ்டேட் வங்கியில் இருப்பது வங்கியின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்று என்னிய சங்கத்தின் தலைவர்கள், ஜமீன்தார் டி.வி.பாலகுருசாமி நாடரை அணுகி, வங்கியில் ஒரு அங்கமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். டி.வி.பாலகுருசாமி நாடார் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு 10% பங்கை வாங்கி, வங்கியின் கமிட்டில் சேர்ந்தார்.

நாடார் வங்கியின் நிறுவனர் இயக்குநர்கள் :

டி.வி.பாலகுருசாமி நாடார்
வி.சண்முகவேல் நாடார் (தலைவர்)
எம்.எம். சின்னமணி நாடார்
வி.இ. காசிசாமி நாடார்
நான் ஒரு. காளியப்ப நாடார்
கே.எஸ்.ஏ. ஆறுமுக நாடார்
வி.இ. ரத்னசாமி நாடார்
ஏ.எஸ். ஆறுமுகசாமி நாடார்
பி.ஏ. மரிமுதூ நாடார்
ஏ.ஷென்பாகா நாடார்

இந்த வங்கி 1921 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி ‘தி நாடார் வங்கி லிமிடெட்’ என்று பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள தெற்கு ராஜா தெருவில் உள்ள அனா மாவண்ணா கட்டிடத்தில், நவம்பர் 11, 1921 அன்று டி.வி.பாலகுருசாமி நாடார் இந்த வங்கியை திறந்து வைத்தார்.

1962 ஆம் ஆண்டில், நாடார் வங்கி தனது பெயரை தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் என்று மாற்றியது. வங்கிக்கு முக்கிய கொள்கையில் ஒன்று கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களுக்கு வங்கி சேவையை கொண்டுசெல்வது, வங்கியின் 509 கிளைகளில், 457 கிளைகள் கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன.

2018–2019 நிதியாண்டில், தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி ரூபாய் 2585 மில்லியன் நிகர லாபத்தை அறிவித்துள்ளது!

நாடார் மகாஜன சங்கம் தனது 100 வது ஆண்டை 2010 இல் நிறைவு செய்தது. சமுதாயத்தில் இன்று நாடார் சமூகம் அடைந்துள்ள முன்னேற்றத்தில், நாடார் மகாஜன சங்கத்துக்கும், அதனை தோற்றுவித்த பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்துக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேற்கோள்கள்:

[1] Page 133, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[2] Page 297, Census of India, 1891, Vol XIII: Madras Report | Page 140, Migration Settlement and Ethnic Associations By K. P. Kumaran | Page 133, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[3] Page 109, Caste in Indian Politics by By Rajni Kothari | Page 134, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[4] Page 41, The Modernity of Tradition: Political Development in India By Lloyd I. Rudolph, Susanne Hoeber Rudolph | Page 121, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[5] Page 124 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[6] Page 29, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[7] Page 187, The Emergence of Provincial Politics – The Madras Presidency 1870—1920 By D. A. Washbrook
[8] The Hindu, 10 and 17 June 1896
[9] The Fourth And Fifth Tours of His Excellency Lord Ampthill, In The Madras Presidency Printed By The Superintendent, Government Press.
[10] Page 131 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[11] Journal of Asian Studies Vol. 37, No. 2 by Lucy Carroll
[12] Mahajanam Magazine dated July 30, 1969
[13] Page 164 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[14] Page 133 to 136 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[15] Govenunent of Madras. Law (General) Department. G. 0. No. 785, dated July 7th
[16] Pages 145 to 147 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[17] List of educational institutions listed on Nadar Mahajana Sangam’s official website
[18] Pages 157 to 162 The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[19] Page 173, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[20] Letter to the Governor of Madras from the Nadar Mahajana Sangam, December 14, 1920 (N.M.S. Letterbook, 1920 -1921)
[21] Nanayam Vikatan, 2012 / Article – Business samugam – Nadargal | In the Rediff.com’s interview with Mr. Kathiresan, grandson of A.M.M. Sinnamani Nadar (Founder Directors)

Courtesy: Nadar Estate

read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு

Nadar House in Tranquebar

பொறையார் நாடார் எஸ்டேட் – கி.பி 1790 இல் தொடங்கிய வரலாறு

1790 ஆம் ஆண்டில், சீனந்தோப்பு (தூத்துக்குடி மாவட்டம் ) எனும் கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி நாடார் என்பவர் அவரது மனைவி எசக்கியம்மாலுடன், தனது சகோதரர்களுடனான தகராறு காரணமாக தனது வீடு மற்றும் சொத்துக்களை விட்டு வெளியேறினார்.

முதலில் அவர் போர்டோ நோவாவுக்கு சென்றார் (அந்த காலத்தில் போர்டோ நோவா ஒரு பிரபலமான துறைமுக நகரம், இப்போது பரங்கிபேட்டை என்று அழைக்கப்படுகிறது).

சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள், பிறகு அவர்கள், வேறு நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடி தரங்கம்பாடிக்கு வந்தார்கள் (தரங்கம்பாடி – டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகநகரம், காவேரி ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்தில், காரைக்காலுக்கு வடக்கே 15 கிமீ தொலைவில் உள்ளது).

தரங்கம்பாடியின் புறநகர்ப் பகுதியான பொறையார் எனும் கிராமத்தில் குடியேறினர். 1791 ஆம் ஆண்டில், தம்பதியினருக்கு வெள்ளையன் எனும் ஒரு மகன் பிறந்தான். வெள்ளையனுக்கு 11 வயதாக இருந்தபோது, பொறையாரில் கள்ளு இறக்கும் பனை தோப்பில் காவலராக பணியாற்றினார்.

Poraiyar Nadars History

16 வயதுக்குள் , வெள்ளையன் கள்ளு வியாபாரம் குறித்து நன்கு அனுபவம் பெற்றுயிருந்தார். அவர் தனது வேலையிலிருந்து சேமித்த சிறிய பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு கள்ளு கடையைத் திறக்க முடிவு செய்தார்.

கள் இறக்குவதற்கு, பனை தோப்பை குத்தகைக்கு எடுக்க போதுமான பணம் அவரிடம் இல்லை, எனவே அவர் டேனிஷ் அதிகாரிகளின் பங்களாக்களை அணுகி, தங்கள் தோட்டத்தில் உள்ள பனை மரங்களை கள் இறக்குவது பயன்படுத்த அனுமதி கேட்டார். அவர்களில் பலர் தங்கள் மரங்களை வெள்ளையனுக்காக வாடகைக்கு கொடுத்தனர் .

கள்ளு கடை நல்ல லாபம் ஈட்டியது, சில ஆண்டுகளிலேயே, அவர் தரங்கம்பாடி பகுதி முழுவதும் பல கள்ளு கடைகளைத் தொடங்கினார்.

இதற்கிடையில், தரங்கம்பாடி பிராந்தியத்திற்கு 5 ஆண்டுகளுக்கு அராக் (சாராயம்) தயாரித்து வழங்குவதற்காக டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து உரிமத்தை (ஐந்து காலா குத்தகை என அழைக்கப்படும்) வைத்திருந்த ஒரு டேனிஷ் பெண்மணி, தன் கடன்களை அடைக்க, தனது அராக் குத்தகை ஒப்பந்தத்தை ஏலம் விடுத்தார்.

வெள்ளையன் நாடார் அவரிடமிருந்து உரிமத்தைப் வாங்கி, பொறையாரில் இருந்து சாராயம் தயாரிக்கத் தொடங்கி, தரங்கம்பாடி பகுதி முழுவதுக்கும் வினியோகம் செய்தார்.

பிரிட்டிஷ் இந்தியாவில், ஒரு மாவட்டத்திற்கு, மூன்று
வருட காலத்திற்கு சாராயத்தை தயாரித்து விநியோகம் செய்ய ஏகபோக உரிமை (monopoly) வழங்கப்பட்டது.

இந்த உரிமை, ஏலத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

1830 ஆம் ஆண்டில், வெள்ளைய நாடார், இந்த ஏலத்தை வென்று தஞ்சை மாவட்டத்திற்கு அப்காரி (சாராயம்) விநியோகஸ்தராக ஆனார். [1] இதன் முலம், சிறுது காலத்திலே பெரும் செல்வம் ஈட்டினார்.

இதற்கிடையில், வெள்ளைய நாடாருக்கு ஒரு மகன் பிறந்தார், அவருக்கு தவசுமுத்து என்று பெயரிடப்பட்டது. 14 வயதிலிருந்தே, தவசுமுத்து நாடார் தனது தந்தையுடன் இணைந்து தொழிலை கவனித்துக்கொண்டார்.

வசுமுத்து நாடார், தொலைநோக்கு பார்வைகொண்டவர், அவர் தனது அப்காரி (சாராயம்) வியாபாரத்தை தென்னிந்தியா முழுவதும் விரிவாக்க விரும்பினார்.

அவர் நிறைய பயணம் செய்தார், பல்வேறு ராஜாக்கள் மற்றும் உயர் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் தனது தொடர்புகளை விரிவுபடுத்தினார்.

மிகக் குறுகிய காலத்தில் தவசுமுத்து நாடார், மதுரை மாவட்டத்திற்கும், பின்னர் திருநெல்வேலி மாவட்டத்திற்கும், ராமநாடுக்கும் சாராயம் தயாரித்து விநியோகிக்கும் உரிமைகளைப் பெற்றார். மூன்று மாவட்டங்களுக்கும் சாராயம் தயாரிக்கும் திறனுடன் தச்சநல்லூரில் ஒரு பெரிய டிஸ்டில்லரியைக் கட்டினார்.

வர்த்தகத்தின் விரிவாக்கம் நாடாருக்கு மேலும் உதவியது, சில ஆண்டுகளில், தென்னிந்தியாவின் பெரும்பகுதிக்கு சாராயம் தயாரித்து விநியோகிக்கும் உரிமைகளை பெற்றார். [2]

இந்த காலகட்டத்தில், தவசுமுத்து நாடார், தஞ்சை மாவட்டதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கினார். தஞ்சை மாவட்டதில்  இருந்த அருந்தவபுரம், கிடங்கல், மேலமருத்தூர், கீழ்க்குடி, காரப்பிடாகை, உலகமாதேவி கிராமங்களை வாங்கினார். [3]

தவசுமுத்து நாடாரின் எஸ்டேட்டில் 7000 ஏக்கர்க்கு மேல் விவசாய நிலங்கள் இருந்தது, இதை தொடர்ந்து, தவசுமுத்து நாடாரின் குடும்பம் மக்களால் “நாடார் எஸ்டேட்” என்று அழைக்கப்பட்டது.

வசுமுத்து நாடார் திருவிதாங்கூர் மகாராஜாவை அணுகி, அங்கு சாராய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி கோரினார், தவசுமுத்து நாடார் அப்காரி வர்த்தகத்தில் நல்ல பெயரைப் பெற்றுயிருந்ததால் , திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதுக்கும் சாராயம் தயாரித்து விநியோகம் செய்ய ஒப்பந்தம் தவசுமுத்து நாடாருக்கு வழங்கப்பட்டது. திருவிதாங்கூரில் பல்வேறு பகுதிகளுக்கு கள்ளு வியாபாரம் செய்ய ஒப்பந்தங்களையும் நாடார் பெற்றார். [4] பின்னர் கொச்சின் இராச்சியத்திற்கும் அவர் சாராயம் தயாரித்து விநியோகம் செய்ய ஒப்பந்தங்களைப் பெற்றார்.

தவசுமுத்து நாடார் வைக்கம், கண்ணன் மலை , நாகர்கோவில் மற்றும் தேவிகுளம் ஆகிய ஊர்களில் சாராய தொழிற்ச்சாலைகளை கட்டி, திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களுக்கு மதுபானங்களை தயாரிக்க தொடங்கினார். [5]

நாடார் எஸ்டேட் – 18 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய டிஸ்டில்லர்கள்

1830 ஆம் ஆண்டிலிருந்து, நாடார் எஸ்டேட், நூறு ஆண்டுகளுக்கு தென்னிந்தியாவின் மிகப்பெரிய டிஸ்டில்லர்களலக திகழ்ந்தது.

மெட்ராஸ் பிரசிடென்சி (அன்று தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது, இதில் தமிழ்நாடு, ஆந்திரா உட்பட, ஒடிசா, கேரளா மற்றும் கர்நாடகாவின் பகுதிகளை உள்ளடக்கியது), திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் கொச்சின் சமஸ்தானம் ஆகிய பகுதிகளுக்கு சாராயம் தயாரித்து வழங்கியது நாடார் எஸ்டேட் . [6]

1830-1920 களுக்கு இடையில் பலமுறை, பொறையார் நாடார் எஸ்டேட் பின்வரும் மாவட்டங்களுக்கு சாராயம் தயாரிக்கவும் விநியோககிக்கவும் ஒப்பந்தங்களை பெற்றது [7]:

  • மெட்ராஸ் நகர பகுதி
  • மதுரை மாவட்டம் (இன்றைய மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
  • திருச்சி மாவட்டம் (இன்றைய திருச்சிராப்பள்ளி, கருர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது)
  • திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகரின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
  • செங்கல்பட்டு மாவட்டம் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மற்றும் சென்னை நகரத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
  • கிழக்கு கோதாவரி மாவட்டம்
  • ராம்நாடு
  • வட ஆற்காடு (இன்றைய சித்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பட்டூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கியது)
  • ராயகடா மாவட்டம் (ஒடிசா)
  • தெற்கு கனரா மாவட்டம் (கர்நாடகாவின் தட்சிணா கன்னடம் மற்றும் உடுப்பி மற்றும் கேரளாவின் காசராகோடு மாவட்டங்களை உள்ளடக்கியது)
  • கோயம்புத்தூர் மாவட்டம் (இன்றைய கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது)

நாடார் எஸ்டேட், 27 டிஸ்டில்லரி (சாராய) தொழிற்சாலைகளை கொண்டுயிருந்தது [8]:

  • மெட்ராஸ் (தமிழ்நாடு)
  • தச்சநல்லூர் (திருநெல்வேலி, தமிழ்நாடு)
  • நாகர்கோயில் (தமிழ்நாடு)
  • ரெனிகுண்டா (ஆந்திரா)
  • பத்ராச்சலம் (தெலுங்கானா)
  • வைக்கம் (கேரளா)
  • கண்ணன் தேவி மலைகள் (கேரளா)
  • திருச்சூர் (கேரளா)
  • தேவிகுளம் (கேரளா)
  • ஜெய்பூர் (ஒடிசா)

மெட்ராஸ், திருவனந்தபுரம், நெல்லூர், காஞ்சிபுரம், வேலூர், மாயாவரம், திருச்சி, மதுரை, காலிகட், மங்களூர் போன்ற இடங்களில் கிடங்குகள் இருந்தன.

தற்கிடையில், தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம், 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக லாபத்தை ஈட்டவில்லை, இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கடுமையான போட்டியின் காரணமாக, டேனிஷ் கம்பெனி படிப்படியாக முக்கியத்துவத்தை இழந்தது. 1845 ஆம் ஆண்டில், தரங்கம்பாடி பகுதி ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, டேனிஷ் கப்பல்களை ஏலம் விடுத்தது, வெள்ளையா நாடார் அந்த ஏலத்தில் 2 கப்பல்களை 40,000 ரூபாய்க்கு வாங்கினார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த, கப்பல் வைத்திருந்த முதல் நபர் பொறையார் நாடார் எஸ்டேடின் வெள்ளையா நாடார் ஆவார்.

அவர் கப்பல்களுக்கு மஹாலக்ஷ்மி என்றும் பாக்யலக்ஷ்மி என்றும் என்று பெயர் மாற்றினார் [9]. பின்னர், பூம்புகாரிலிருந்த ஒரு முஸ்லீம் வர்த்தகரிடமிருந்து மற்றொரு கப்பலை (புஹார் மொய்தீன்) வாங்கினார். நாடார் எஸ்டேடின் வணிகக் கப்பல்கள், தென்கிழக்கு ஆசியா, மலேசியா மற்றும் இலங்கை முழுவதும் பயணம் செய்தன.

தொடர்ந்து, பொறையார் நாடார்கள் உப்பு வர்த்தகத்தில் இறங்கினர், அவர்கள் நாகப்பட்டினத்தில் பல ஏக்கர் உப்பளங்கள் கொண்டுயிருந்தனர் . [10]

இதற்கிடையில், வெள்ளையன் நாடாருக்கு இரண்டாவது மகன் பிறந்தார், அவருக்கு பொன்னுசாமி என்று பெயரிட்டார் (பொன்னுசாமி நாடார், நாடார் மகாஜன சங்கத்தின் முதல் தலைவர்).

டேனிஷ் முதன்முதலில் தரங்கம்பாடிக்கு வந்தபோது, ​​டேனிஷ் ஆளுநர் பொறையார் ஊரின் மையத்தில், 7 ஏக்கர் பரப்பளவில், அழகிய தோட்டத்தின் நடுவில் ஒரு மாளிகையை கட்டினார்.

“ஆளுநரின் தோட்டம்” என்று அழைக்கப்பட்ட அந்த தோட்டம், டேனிஷ் ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்கும், களியாட்டங்களிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவதற்கு என்று கட்டப்பட்டது.

1865 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை விற்க முடிவு செய்தனர், வெள்ளையா நாடார் அதை 1,000 பவுண்டுக்கு விலைக்கு வாங்கினார். [11]

இந்த மாளிகை, முன்பு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமானதால், இந்த மாளிகையை “கம்பெனிஸ் கார்டன்” (குமினி தோட்டம்) என்று பெயரிட்டு தனது மகன் தவசுமுத்து நாடருக்கு பரிசளித்தார்.

கம்பெனிஸ் கார்டன்,  நாடார் எஸ்டேடின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது.

1873-ல் தவசுமுத்து நாடார் அரியலூர் ஜமீன்தாரியைக் நீதிமன்ற ஏலத்தில் வாங்கி [12], அரியலூரின் ஜமீன்தார் ஆனார். அவர் நாடார் சமூகத்திலிருந்து முதல் ஜமீன்தார் ஆவார்.

பிரிட்டிஷ் மன்னர் ஏழாம் எட்வர்ட் – தவசுமுத்து நாடார் சந்திப்பு

க்டோபர் 1875 இல், விக்டோரியா மகாராணியின் மூத்த மகன், வேல்ஸ் இளவரசரான ஆல்பர்ட் எட்வர்ட்,  (ஆல்பர்ட் எட்வர்ட் (ஏழாம் எட்வர்ட்) 1901 இல் பிரிட்டிஷ் பேரரசின் மன்னரானார்), எச்.எம்.எஸ். செராபிஸில் கப்பலில் ஏறி இந்தியாவுக்குச் வந்தார்

தனது நான்கு மாத பயணத்தின் போது, ​​இளவரசர் படகு, ரயில், வண்டி மற்றும் யானை மூலம் இந்திய துணைக் கண்டத்தின் அனைத்து மூலைகளிலும் பயணம் செய்தார். நவீன இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையின் 21 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் டவுன்களுக்குச் சென்ற அவர் 90 க்கும் மேற்பட்ட அரச சபைகளில் விருந்தினராக கலந்து கொண்டார்.

தனது நான்கு மாத பயணத்தின் போது, ​​இளவரசர் படகு, ரயில், வண்டி மற்றும் யானை மூலம் இந்திய துணைக் கண்டத்தின் அனைத்து மூலைகளிலும் பயணம் செய்தார். நவீன இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையின் 21 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் டவுன்களுக்குச் சென்ற அவர் 90 க்கும் மேற்பட்ட அரச சபைகளில் விருந்தினராக கலந்து கொண்டார்.

டிசம்பர் 11, 1875 இல், இளவரசர் எட்வர்ட் திருச்சிராப்பள்ளியை அடைந்தார்,  இளவரசரின் தஞ்சை பயணம் ரத்து செய்யப்பட்டதால்,  தஞ்சை மாவட்டத்தின் முக்கியஸ்தர்களை திருச்சி வரவழைத்து இளவரசரை சந்திக்க வைக்க ஏட்பாடு செய்யப்பட்டது.

நாடார் எஸ்டேடின் நெருங்கிய நண்பரான தஞ்சை கலெக்டர் திரு. ஹென்றி சல்லிவன் தாமஸ், ஜமீன்தார் தவசுமுத்து நாடாரை, இளவரசர் எட்வர்டுகு அறிமுகம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பல பிரபுக்களும் கலந்துக்கொண்டனர். [13]

(திருச்சிராப்பள்ளியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த இளவரசர், அருகில் இருந்த ஊர்களுக்கு விஜயம் செய்தார். அப்பொழுது வல்லம் எனும் ஊரில் இருந்த நாடார் எஸ்டேடின் அரண்மனையில் (கலெக்டரின் இல்லம்), பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இளவரசர் எட்வர்ட் சிறிது நேரம் தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது).

வெள்ளைய நாடார் தனது 85 வயதில், 1876 நவம்பரில் காலமானார், சாதாரண பின்னணியில்பிறந்தாலும், வெள்ளையா நாடார் தனது உழைப்பால் மெட்ராஸ் மாகாணதின் பெரும் செல்வந்தராக உயர்ந்தார். [14]

தவசுமுத்து நாடார், நாடார் எஸ்டேடின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தவசுமுத்து நாடார் 1880 ஆம் ஆண்டில் காரைக்காலில் ஒரு பத்திரிகையை துவங்கினர், அதற்கு “சத்தியாபிமணி” என்று பெயரிடப்பட்டது, புகழ்பெற்ற இலங்கை தமிழ் எழுத்தாளர், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) இந்த இதழின் ஆசிரியராக இருந்தார் . [15]

தவசுமுத்து நாடார் தனது மாவட்டத்தில் உள்ள மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு பள்ளியை துவங்கினர் . 1882-ல் “தவசுமுத்து நாடார் பள்ளி” என்ற பேருடன் பள்ளி திறக்கப்பட்டது. [16]

இலை சோறு கலாச்சாரம்

லை சோறு என்பது ஒரு பண்டைய கலாச்சாரமாகும், அந்த நாட்களில், தென்னிந்தியாவின் பல மன்னர்கள் மற்றும் புகழ்பெற்ற பிரபுகள், தங்கள் வீடுகளில் “இலை சோறு” பழக்கத்தை பின்பற்றினர்.

இதில் அக் குடும்பத்தலைவன் சாப்பிட்ட பின், அவர் இலையில் மிதமிருந்த உணவை விரும்பியவர்கள் தாங்களே முன்வந்து சாப்பிட்டார்கள்.

தகுதியின்மேல் நடைபெறுவது இம்மாதிரி செயல்கள்.

தவசுமுத்து நாடாரின் காலத்தில், நாடார் எஸ்டேட்யில் தொடங்கியது“இலை சோறு” கலாச்சாரம். நாடார் எஸ்டேட்டில் இலை சோறு சாப்பிடுவது புண்ணியம் என்று கருதி வசதி உள்ளவர்களும் “கம்பனிஸ் கார்டன் ” வந்து இலை சோறு சாப்பிட்டார்கள்.

இந்த பழக்கம் 1939 வரை பொறையார் நாடார் குடும்பத்தில் தொடர்ந்தது. [17]

குறிப்பு: இது அடிமைப்படுத்தும் செயலோ அல்லது அவமரியாதை செயலோ அல்ல. பழங்காலத்தில் நடைமுறையில் இருந்துவந்த இதுபோன்ற பழக்கவழக்கங்களை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.

அரசாங்கத்துக்கு பொறையார் நாடார் எஸ்டேட் செய்த உதவிகள்

ந்த காலகட்டத்தில், பல பிரபுக்களைப் போலவே, நாடார் எஸ்டேடும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், சீரான சட்ட மற்றும் நிர்வாக அமைப்புக்கு பிரிட்டிஷின் ஆட்சி தேவை என்று நம்பியது.

நாடார் ஹவுஸ்

பிரிட்டிஷ்சார், தஞ்சையின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை தரங்கம்பாடிக்கு மாற்ற விரும்பியபோது, ​​தவசுமுத்து நாடார் தனது தரங்கம்பாடி பங்களாவை அவர்களுக்கு உபயோகித்துக்கொள்ள குடுத்தார். 1878 ஆம் ஆண்டில், நீதிமன்றம் தஞ்சைக்கு மாற்றப்பட்டபோது, ​​நாடார் அவர்கள் இந்த வீட்டை கலைரீதியாக அலங்கரித்து, பிரிட்டிஷ் ஆளுநர்கள் மற்றும் கலெக்டர்களுக்குகான விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தினர்.

இந்திய வைசிராய் லார்ட் ஆம்ப்தில் மற்றும் லேடி ஆம்ப்தில் தரங்கம்பாடிக்கு விஜயம் செய்தபோது, ​​அவர்கள் பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தின் விருந்தினராக இந்த வீட்டில் தங்கினர். [18]

வல்லம் அரண்மனை

தவசுமுத்து நாடார் 1872 ஆம் ஆண்டில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் எனும் ஊரில் ஒரு அரண்மனையை கட்டினார், அந்த அரண்மனையை தஞ்சை பிரிட்டிஷ் கலெக்டர் தாங்குவதற்கு குடுத்தார் , இது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை மாவட்ட ஆட்சியர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்தது. [19]

மெட்ராஸ் ஆளுநர் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும் போதெல்லாம், அவர் நாடார் எஸ்டேடின் வல்லம் அரண்மனையில் தங்கியிருக்கிறார் [20] .

அரசாங்கத்தின் பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்

முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் தஞ்சையில் ஒரு ரயில் நிலையம் கட்ட முடிவுசெய்தபோது, வெள்ளைய நாடார், தனது தஞ்சை மாளிகையை அரசாங்கத்திற்கு கொடுத்தார், ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவாயிலில் இருந்த இந்த பங்களா, ஆங்கிலேயர்களால் ரயில்வே மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டது.

தஞ்சை நகரத்தில் இருந்த இங்கிலிஷ் கிளப் மற்றும் செங்கல்பட் சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவை நாடார் எஸ்டேடின் கட்டிடங்களில் இயக்கப்பட்டன. [21]

காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி

இந்தியாவின் மிகப் பழமையான தேசியக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் 1885 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சார்பு இந்திய அமைப்பாக நிறுவப்பட்டது.

1885 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தொடங்கப்பட்டதிலிருந்து 1890 களின் முற்பகுதி வரை, பொரையார் நாடார் எஸ்டேட் குடும்பம் காங்கிரஸின் முக்கிய பைனான்சியர்களில் ஒருவராக இருந்தது. [22]

தேசம் முழுவதும் தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற  தனது லட்சிய இலக்கை அடையும் முன்னரே தவசுமுத்து நாடார், தனது 55 வயதில் (1885 இல் தஞ்சையில்)காலமானார்!
தவசுமுத்து நாடார் தனது வாரிசுகளுக்கு தான் கற்ற வர்த்தக அனுபவம் மற்றும் நுணுக்கககளை கற்றுத்தருவதற்குள் காலமானதால், 19 வயதேயானா, அவரது முத்த மகன், இந்த தொழில் குறித்த அனுபவம் எதுவும் பெறவில்லை.

தவசுமுத்து நாடாருக்கு மூன்று மகன்கள் :

  • ரத்தினஸ்வாமி நாடார் 1865 – 1912
  • வெள்ளைத்தம்பி நாடார்
  • குருசாமி நாடார்

நாடார் எஸ்டேடின் நிர்வாகம், அனுபவமற்ற டி.ரத்னசாமி நாடாரின் தோள்களில் விழுந்தது.

அவரது தந்தையைப் போலல்லாமல், ரத்னசாமி நாடார், தொழிலில் குறையாகவே ஈடுபாடு கொண்டிருந்தார், மேலும் அரசியல் மற்றும் நாடார் சமூகத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டினார்.

நாடர் மகாஜன சங்கத்தை நிறுவியதின் மூலம் நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் ரத்னசாமி நாடார் முக்கிய பங்கு வகித்தார் (சங்கம் குறித்து மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்) மற்றும் அவரது காலத்தில் கோவில்களில் நாடார்களின் உரிமையை நிலைநாட்டியது பொறையார் நாடார் எஸ்டேட் (கோவில் அரசியல் குறித்து மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்) .

சங்கம், கோவில் அரசியல் மற்றும் அவரது காலத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு பொது நல சேவைகள் ஆகியவையால் நாடார் எஸ்டேட் பெருமளவு செல்வத்தை இழந்தது. ரத்தினசாமி நாடாரின் நிர்வாகத்தின் கீழ், அத்தகைய செலவினங்களுக்காக அவர் அதிக கடன்களையும் வாங்கினார்.

சங்கம், கோவில் அரசியல் மற்றும் அவரது காலத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு பொது நல சேவைகள் ஆகியவையால் நாடார் எஸ்டேட் பெருமளவு செல்வத்தை இழந்தது. ரத்தினசாமி நாடாரின் நிர்வாகத்தின் கீழ், அத்தகைய செலவினங்களுக்காக அவர் அதிக கடன்களையும் வாங்கினார்.

1911 ஆம் ஆண்டில், சமுதாயத்துக்கு அவர் செய்த சேவைகளை அங்கீகரித்து, ரத்தினசாமி நாடருக்கு “ராவ் பகதூர்” பட்டம் வழங்கப்பட்டது. [23]

டி. ரத்தினசாமி நாடார் 1912 இல் காலமானார். முன்னதாக, 1907 இல், தவசுமுத்து நாடாரின் இரண்டாவது மகன் வெள்ளைத்தம்பி நாடார் காலமானார். எனவே தவசுமுத்து நாடரின் மூன்றாவது மகன் டி. குருசாமி நாடார் 1912 முதல் நாடார் எஸ்டேட்டின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார்.

அவர் நாடார் எஸ்டேட் குடும்பத்தின் ஒரே மூத்தவர் என்பதால், அவர் எஸ்டேட் மற்றும் வணிகங்களை நிர்வகிக்க கடுமையாக பாடுபட வேண்டியிருந்தது. அரியலூரின் ஜமீன்தாராகவும் பொறுப்பேற்ற குருசாமி நாடார் தனது முன்னோர்களைப் போலவே மிகுந்த கவனத்துடன் வணிகத்தை நிர்வகித்து, தென்னிந்தியாவின் பெரும்பகுதிக்கு அப்காரி (சாராயம) ஒப்பந்தங்களைப் பெற்றார்.

முதலாம் உலகப் போர் மற்றும் நாடார் எஸ்டேட் மீதான அதன் தாக்கம்

முதலாம் உலகப் போர் இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் குழப்பத்தை உருவாக்கியது. பிரிட்டிஷ் போர் நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமான அடிப்படை பொருட்கள் அனுப்பப்பட்டன. இது உணவுப் பொருட்களுக்கான தேவை, பரவலான உணவு பஞ்சம் மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.

இதற்கிடையில், நாடார் எஸ்டேட் தென்னிந்தியாவின் மிகப்பெரிய டிஸ்டில்லராக இருந்தது [24], மெட்ராஸ், மதுரை, ராம்நாட், திருநெல்வேலி மற்றும் திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் சமஸ்தானம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் கிட்டத்தட்ட 70% பகுதிக்கு சாராயம் தயாரித்துத்தர உரிமையைக் கொண்டிருந்தது.

1917 ஆம் ஆண்டில், ஜமீன்தார் டி. குருசாமி நாடார், இந்த மாவட்டங்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு ஒரு நிலையான விலையில் சாராயம் விநியோகம் செய்ய ஒப்பந்தங்களை பெற்றுயிருந்தார், ஆனால் போருக்குப் பிந்தைய பொருளாதார குழப்பத்தால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்தது. 1920 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒப்பந்தங்கள் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது, நாடார் எஸ்டேட் அவர்கள் தயாரித்த ஒவ்வொரு கேலன் மதுபானத்திலும் ஒரு ரூபாய் நான்கு அனா இழந்தது! [25]

1917 ஆம் ஆண்டில், ஜமீன்தார் டி. குருசாமி நாடார், இந்த மாவட்டங்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு ஒரு நிலையான விலையில் சாராயம் விநியோகம் செய்ய ஒப்பந்தங்களை பெற்றுயிருந்தார், ஆனால் போருக்குப் பிந்தைய பொருளாதார குழப்பத்தால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்தது. 1920 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒப்பந்தங்கள் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது, நாடார் எஸ்டேட் அவர்கள் தயாரித்த ஒவ்வொரு கேலன் மதுபானத்திலும் ஒரு ரூபாய் நான்கு அனா இழந்தது! [25]

இதை அரசு அங்கீகரித்து ரூ. 2,15,000 (அந்த காலகட்டங்களில் இது பெரிய தொகை). ஆனால் இழப்பு ஒப்பீட்டளவில் மிக அதிகமாக இருந்தது. நாடார் எஸ்டேட் கிட்டத்தட்ட திவாலானது. [26]

குருசாமி நாடார் 1920 நவம்பரில் இந்த இழப்பீட்டைப் பெற்றார். அவருக்கு இழப்பீடு தந்தத்துக்கு நன்றி தெரிவிப்பதற்கும் அடுத்த கால ஒப்பந்தங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் அடுத்த நாள் மெட்ராஸ் ஆளுநருடன் ஒரு சந்திப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இரவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

முழு நாடார் எஸ்டேடின் நிர்வாகமும் இளைஞரான டி.வி.பாலகுருசாமி நாடாரின் தோள்களில் விழுந்தது. இவர் டி.வெள்ளைத்தம்பி நாடாரின் மகன்.

பிரிட்டிஷ் பேரரசின் மன்னருடன் டி.வி.பாலகுருசாமி நாடார்

வேல்ஸ் இளவரசர், எட்வர்ட் (பின்னர் பிரிட்டிஷ் பேரரசின் மன்னரான எட்டாம் எட்வர்ட்) அக்டோபர் 1921 முதல் மார்ச் 1922 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.

ஜனவரி 13, 1922 இல், இளவரசர் மெட்ராஸ் வந்தடைந்தார், இங்கு அவர் 4 நாட்கள் தங்கியிருந்தார். இளவரசருக்காக அரசாங்க இல்லத்தில் ஒரு விருந்து நடைபெற்றது, இதில் இளவரசருடன், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள், இந்திய இளவரசர்கள் மற்றும் ஜமீன்தார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஜமீன்தார் டி.வி.பாலகுருசாமி நாடாரும் கலந்து கொண்டார். இவ் விருந்தின் பொது, இளவரசருக்கு, பாலகுருசாமி  நாடார், பொறையார் நாடார் எஸ்டேடின் சார்பாக, மரகத கற்கள் பதித்த ஒரு கைத்தடியை காணிக்கையாக தந்தார்.

1921 ஆம் ஆண்டில், பாலகுருசாமி நாடார் தலைமையில், நாடார் எஸ்டேட் தென்னிந்தியாவில் வெகு சில மாவட்டங்களுக்கு மட்டுமே அப்காரி உரிமையையே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. பல மாவட்டங்களை அதன் போட்டியாளர்களிடம் இழந்தது. எஸ்டேட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க தன்னால் முடிந்தவரை பாலகுருசாமி நாடார் முயன்றார், ஆனால் அந்த நேரத்தில், நாடார் எஸ்டேட்டின் நிலைமை மிகவும் சிக்கலான நிலைமையில் இருந்தது.

இந்த இழப்பு பொறையார் நாடார் எஸ்டேட்டின் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கியது, டி.ரத்தினஸ்வாமி நாடார் மற்றும் டி. குருசாமி நாடார் ஆகியோரின் மகன்கள், டி.வெள்ளைத்தம்பி நாடார் மகன்களுக்கு (டி.வி.பாலகுருசாமி நாடார் மற்றும் அவரது சகோதரர்கள்) எதிராக பாகபிரிவினை கோரி வழக்கு தொடர்ந்தனர்.

அந்த காலத்தில் மிகவும் பிரபலமான இந்த வழக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீடித்தது. நீதிமன்றம், பொறையார் நாடார் எஸ்டேட்-ஐ நிர்வகிக்க ரெஸிவேர்ஸ்-களை நியமித்தது.

ரிஸிவெர்ஸின் நிர்வாகத்தின் கீழ், நாடார் எஸ்டேட், 100 வருடங்களா தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அப்காரி ஒப்பந்தங்கள் அனைத்தையும் இழந்தது.

இந்த வழக்கு மிகவும் கசப்பான அனுபவங்களை தந்தது. பல வருடங்களாகவே, நாடார் எஸ்டேட் கடன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுஇருந்தது, இருப்பினும், நாடார் எஸ்டேட்டின் வீழ்ச்சிக்கு அவர் ஒருவரே கரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் டி.வி.பாலகுருசாமி நாடார், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு 1929 ஜூலை 5 ஆம் தேதி தனது இல்லமான “கும்பினி தோட்டத்தில்” தற்கொலை செய்து கொண்டார்!

1937 ஜூலை 30 ஆம் தேதி, நாடார் எஸ்டேட்டின் சொத்துக்களை ஏலத்தில் விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, அதில் தவசமுத்து நாடரின் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்க உரிமை தரப்பட்டது (அதாவது இது ஒரு பொது ஏலம் அல்ல, தனியார் ஏலம்) செப்டம்பர், 1937 இல் ஏலம் நடந்தது.

அதைத் தொடர்ந்து, பொறையார் நாடார் எஸ்டேட்டின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்தன, ஒருவருக்கொருவர் நல்ல உறவைப் பேணி வந்தனர்.

ஜமீன்தார் குருசாமி நாடாரின் சந்ததியினர் இப்பொழுது நாடார் எஸ்டேட்டின் பூர்வீக இல்லமான “கும்பினி தோட்டத்தில்” வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்:

[1] Page 114, The Emergence of Provincial Politics – The Madras Presidency 1870—1920 By D. A. Washbrook
[2] Various year’s “Report on the Administration of the Excise Revenue in the Presidency of Fort Saint George” | List of business carried on behalf of the family, listed under Schedule III in Civil suit no 655 of 1921 | Page 1478, Thackers Indian Dictionary Including Burma And Ceylon(1937-38)
[3] The will of Mr. P. Vellaiya Nadar, registered in Tranquebar sub-registers office on 11, March 1876 | List of immovable properties listed on Schedule II of Civil suit no 655 of 1921
[4] Page 302, The decline of Nayar dominance – society and politics in Travancore 1847-1908
[5] List of immovable properties listed on Schedule II (Part II) of Civil suit no 655 of 1921
[6] Page 1478, Thackers Indian Dictionary Including Burma And Ceylon(1937-38) | Various year’s “Report on the Administration of the Excise Revenue in the Presidency of Fort Saint George”
[7] Various year’s “Report on the Administration of the Excise Revenue in the Presidency of Fort Saint George” | List of business carried on behalf of the family, listed under Schedule III in Civil suit no 655 of 1921
[8] Page 237, Report on the quality manufacture & excise-control of alcoholic liquors in India | List of immovable properties listed on Civil suit no 655 of 1921
[9] Page 822, The Asylum Press Almanac And Compendium Of Intelligence For 1883 |  Page 742, The Asylum Press Almanac And Compendium Of Intelligence For 1881 | The will of Mr. P. Vellaiya Nadar, registered in Tranquebar sub-registers office on 11, March 1876
[10] Page 115, The Emergence of Provincial Politics – The Madras Presidency 1870—1920 By D. A. Washbrook
[11] Page 468, Mission Life: Or Home and Foreign Church Work, Volume 6 by Rev. J.J. Halcombe
[12] Page 1595, The Asylum Press’s Almanack and Directory of Madras and Southern India 1919 | Page 146, Madras District Gazetteers: Statistical Appendix for Trichinopoly District
[13] Page 280, The Prince of Wales’ tour: a diary in India; with some account of the visits of His Royal Highness to the courts of Greece, Egypt, Spain and Portugal (1877) by Russell, William Howard
[14] Page 466, Mission Life: Or Home and Foreign Church Work, Volume 6 by Rev. J.J. Halcombe.
[15] Page 188, Critical study of Nannul and its commentaries by Ka. Pa Aravanan
[16] Page 201, Statistical Appendix And Supplement To The Revised District Manual (1906) For Tanjore District
[17] Mahajanam Magazine, 15, June 1969
[18] The Fourth and Fifth Tours of His Excellency Lord Ampthill, In The Madras Presidency Printed By The Superintendent, Government Press
[19] Page 280, Tanjore District Gazetteers by FR. Hemingway 1906 | Page 64, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[20] The Fourth and Fifth Tours of His Excellency Lord Ampthill, In The Madras Presidency Printed By The Superintendent, Government Press
[21] List of immovable properties listed on Civil suit no 655 of 1921
[22] Page 178 and 200, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[23] Page 364, The Historical Record of The Imperial Visit to India-1911 by John Murray, London | Page 113, Who’s who in India (lives and photographs of the recipients of honors on 12th December 1911)
[24] Page 142, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[25] Page 106, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[26] List of Moveable properties listed in the Schedule II of Civil suit no 655 of 1921 | Page 142, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook

Courtesy: Nadar Estate

read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

அரியலூர் ஜமீன்தாரிகளின் வரலாறு

Zamindars Controlled Places in Tiruchirappalli District

ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் சலுகை பெற்ற ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

ஜமீந்தார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விளைநிலங்களிலிருந்து கிடைக்கும் தானியங்களின் ஒரு பகுதியை குடியானவர்களிடமிருந்து வரியாக வசூலித்து ஆங்கிலேய அரசுக்கு கப்பமாகச் செலுத்தினர்

அரியலூர் ஜமீன்தாரி* திருச்சி மாவட்டத்தின் கிழக்கிலும், கொல்லிடம் ஆற்றின் வடக்கிலும் அமைந்துள்ளது.

அரியலூர் பகுதி ஆங்கில ஆட்சியின் கீழ் வந்தபோது, கி.பி 1817 இல் இந்த பகுதி நிரந்தரத் தீர்வு ஒப்பந்ததின் கீழ் ஜமீன்தாரி “எஸ்டேட்” -அகா  மாறியது.

* ஜமீன்தாரின் பிரதேசம்

Zamindars Controlled Places in Tiruchirappalli District
Zamindars Controlled Places in Tiruchirappalli District
அரியலூரின் ஜமீன்தாரியில் இருந்த கிராமங்களின் பெயர்கள் பின்வருமாறு:

குஷா அரியலூர்
உசைனகரோம்
தொண்டப்பாடி
எலந்தங்குலி
செரநாதம்
அழகிரி பலையம்
சீதாராமபுரம்
அல்லிநகரம்
மஹாலிநாபுரம்
கொல்லபுரம்
ஜெயராமபுரம்
கோவிந்தபுரம்
மனக்கல்
குரும்வஞ்சாவடி
தாமரைக்குளம்

ரவுத்தம்பட்டி
வெங்கடரமணபுரம்
அஸ்பாபாத்
முத்துநாயக்கம்பட்டி
சீனிவாசபுரம்
ஹமுமந்தபுரம்
கொனேரிராயபுரம்
ஹஸ்தினாபுரம்
கல்லங்கூரிச்சி
மனக்குடி
உசைனாபாத்
வலஜநகர்
வேலூர்
வெங்கடகிருஷ்ணபுரம்
கிருஷானபுரம்

சுப்பவராயபுரம்
அம்மகுளம்
திருமலைரயபுரம்
தவுதகுளம்
மரவனூர்
ராமலிங்கபுரம்
ரசூலாபாத்
மக்காய்குலம்
பதர்குடி
அருணகிரிமங்கலம்
பெரையூர்
புஜங்காராயணல்லூர்
நோச்சிகுளம்
ராமநாதபுரம்

மேலசுப்பராயபுரம்
முகுந்தபுரம்
புத்துவேங்கடமணபுரம்
ஆர்தர்
பப்பனச்சேரி
வரமாவசி
நல்லக்கபாளையம்
மல்லூர்
குஷா மேலமதூர்
கிலமத்தூர்
மானகம்
கைர்லாபாத்
எருத்துக்காரம்பட்டி

பொறையார் தவசுமுத்து நாடார், நீதிமன்ற ஏலத்தில் அரியலூர் ஜமீன்தாரியை வாங்கி, அரியலூரின் முதல் நாடார் ஜமீன்தார் ஆனார். [3] [4] [5]

அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் டி. ரத்தினசாமி நாடார், அரியலூரின் ஜமீன்தாராக பொறுப்பேற்று 1912 வரை ஜமீன்தாரியை நிர்வகித்தார்.

அவரது காலகட்டத்தில், உடையார்பாளையம் ஜமீன்தார் (குமார விஜய ஒப்பிலாத மழவராயர் நைனரின் மாமனார் ) அரியலூர் ஜமீன்தாரியின் 7 கிராமங்களை டி.ரத்தினசாமி நாடாரிடம் வாங்கி கே.வி.ஓ.எம்.நைனருக்கு வழங்கினார். [6]

டி. ரத்தினசாமி நாடாரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது தம்பி டி. குருசாமி நாடார் அரியலூரின் ஜமீன்தார் ஆனார், அவர் 1920 இல் இறக்கும் வரை அரியலூர் ஜமீன்தாரியை ஆட்சி செய்தார்.

டி.வி.பாலகுருசாமி நாடார் ஒரு குறுகிய காலத்திற்கு அரியலூர் ஜமீன்தாராக இருந்தார், அவர் பொறையார் நாடார் எஸ்டேட்டை சேர்ந்த கடைசி ஜமீன்தார் ஆவார்.

பொறையார் நாடார் எஸ்டேட் அரியலூரின் ஜமீன்தார் என்ற பட்டத்தை அரை நூற்றாண்டு காலம் வைத்திருந்தார்கள். [7]

பொறையார் நாடார் எஸ்டேட்யை சேர்ந்த அரியலூரின் ஜமீன்தார்கள் பட்டியல்:

  • வி.தவசுமுத்து நாடார் – கி.பி 1873 – 1885
  • டி.ரத்னசாமி நாடார் – கி.பி.1885 – 1912
  • டி.குருசாமி நாடார் – கி.பி. 1912 – 1920
  • டி.வி.பாலகுருசாமி நாடார் – கி.பி.1920 – 1922

அதே காலகட்டத்தில், நாடார் எஸ்டேட், தஞ்சை மாவட்டதை சேர்ந்த இரண்டு சிறிய ஜமீன்களுக்கும் ஜமீன்தார்களாக இருந்தது: [8]

  • உலகமாதேவி ஜமீன்
  • காரப்பிடாகை ஜமீன்

மேற்கோள்கள்:

[1] Political Manu (MSS) Memorandum submitted by M. R. Chinnappadurai to the Collector of Tiruchirappalli, dated 17th February 1900.
[2] The Aristocracy of Southern India By A. Vadivelu (1903) | Lewis Moore, Manual of the Trichinopoly District
[3] Page 1595, The Asylum Press’s Almanack and Directory of Madras and Southern India 1919
[4] Page 146, Madras District Gazetteers: Statistical Appendix for Trichinopoly District
[5] List of liabilities listed on Schedule IV of Civil suit no 655 of 1921
[6] Page 346 Madras District Gazetteers – Trichinopoly Volume 1 – FR. Hemingay ICS. 1907.
[7] Page 1595, The Asylum Press’s Almanack and Directory of Madras and Southern India 1919 | List of liabilities listed on Schedule IV of Civil suit no 655 of 1921
[8] List of liabilities listed on Schedule IV of Civil suit no 655 of 1921

Courtesy: Nadar Estate

read more
சமுதாய செய்திகள்

மறைக்கப்பட்டதா மாவீரர் அனந்த பத்மநாப நாடாரின் வீரமும் வரலாறும்?

Veera Thalapathy Anantha Padmanabhan Nadar

மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார் களரி, வர்மக்கலை, அடிமுறை போன்ற போர்க்கலைகளில் மிகப்பெரும் வல்லவராவார். இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குளச்சல் போரின் போது டச்சு இராணுவத்திற்கு எதிராக போராடிய ஒரு துணிச்சலான போர்ப்படை தளபதி ஆவார்.

பிறப்பு மற்றும் தோற்றம்

னந்தபத்மநாபன் கொல்லம் ஆண்டு சிங்கம் 24, 873 (கி.பி. 1698) அன்று கண்ணனூர் தச்சன்விளையில் 64 அறைகள் கொண்ட வீட்டில் தனுமலைய பெருமாள் ஆசான் மற்றும் லெக்ஷ்மி தேவி ஆகியோருக்கு பிறந்தார். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இது கல்குளம் வட்டத்தின் தற்போதைய வெய்யனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம் மற்றும் குடும்ப வரலாறு

இவரது தந்தை இவருக்கு இட்ட பெயர் அனந்தப் பெருமாள் ஆனால் இவரது தாய்மாமன் மற்றும் உறவினர்கள் பத்மநாபன் என்ற செல்லப்பெயரோடும் மற்றவர்கள் அவரை பாபு அரசன் அல்லது இள வீர ராஜன் என்றும் அழைத்தனர். பின்னர் மன்னர் மார்த்தாண்ட வர்மா அனந்தனையும் பத்மநாபனையும் இணைத்து அவரை அனந்தபத்மநாபன் என்று அழைத்தார். இவருக்கு பொன்னம் பெருமாள் மற்றும் மாயகொண்டப் பெருமாள் என்ற இரண்டு சகோதரர்களும், தங்கப்பழம் மற்றும் சரஸ்வதி தேவி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

தாணுமலையப் பெருமாள், திருப்பப்பூர் அரச குடும்பத்தின் வழித்தோன்றல் ஆவார். இந்த குடும்பத்தின் வரலாற்று சுவடு ஆய் ராஜ்ஜியம் எனும் பிற்கால சேர ராஜ்ஜியத்தில் இருந்தும் தொடங்குகிறது. தாணுமலையப் பெருமாளுக்கென்று நூற்றுக்கும் மேற்பட்ட அடிமைகள் இருந்தனர். மன்னர் ராமவர்மாவின் முதன்மைத் தளபதியாக இருந்தவர் தாணுமலையப் பெருமாள். அவர் ஆயுதங்கள் தயாரிக்கும் பொறுப்பில் இருந்தார். மேலும், அவர் வேநாட்டின் ஆயுதக் கிடங்கின் பொறுப்பாளராக இருந்தார். மேலும், களரி எனப்படும் 108 தற்காப்புக் கலை பயிற்சி மையங்களின் தலைவராகவும் இருந்தார்.

டச்சு படைகளின் தாக்குதல்கள்

அன்றைய காலக்கட்டத்தில் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் இப்பகுதியில் வர்த்தக நிலையத்தை நிறுவி, கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது. அங்கு மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் ஆளப்பட்ட திருவிதாங்கூர் இராஜ்ஜியம் உட்பட உள்ளூர் ராஜ்ஜியங்களின் மீது கட்டுப்பாட்டைப் பெறவும் அவர்கள் முயன்றனர்.

1741 ஆண்டில், அட்மிரல் யூஸ்டாசியஸ் டி லானாய் தலைமையிலான டச்சு இராணுவம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது படையெடுத்தது. அப்போது மன்னர் மார்த்தாண்ட வர்மா தனது படையை ஒருங்கிணைத்து டச்சுக்காரர்களுக்கு எதிராக போரிட்டார், ஆனால் அவர்களை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. டச்சு இராணுவம் ராஜ்யத்தை தொடர்ந்து அச்சுறுத்தியது, அவர்களை தோற்கடிக்க ஒரு புதிய உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை மன்னர் உணர்ந்தார்.

மன்னர் மார்த்தாண்ட வர்மா, தனது துணிச்சலுக்கும் போர்த்திறமைக்கும் பெயர் பெற்ற வீரத் தளபதி அனந்த பத்மநாபன் நாடாரின் உதவியை நாடினார். ராஜா வீரத் தளபதி அனந்த பத்மநாபன் நாடார் திருவிதாங்கூர் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் டச்சுக்காரர்களை தோற்கடிக்கும் பணிகளை தலைமையேற்று மேற்கொண்டார்.

அனந்தபத்மநாப நாடாரின் போர் வியூகம்

போர்ப்படைத் தளபதி அனந்த பத்மநாபன் நாடார் தலைமையிலான இராணுவம் டச்சு படைகளிற்கு எதிராக தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. டச்சு இராணுவத்தை தோற்கடிக்க அவர்கள் கொரில்லா போர், சாமர்த்தியமான திட்டமிடல் மற்றும் ஆச்சர்ய திடீர் தாக்குதல்களை கையாண்டனர். ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தில், வீரத் தளபதி அனந்த பத்மநாபன் நாடாரின் படை டச்சு இராணுவத்தின் சப்ளை லைன்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தினர், இதனை எதிகொள்வதற்கான முன்னேற்பாடுகள் இல்லாமல் டச்சு படை சிதறுண்டது.

இறுதியாக, 1741 இல் குளச்சல் போரில், தளபதி அனந்த பத்மநாபன் நாடார் மற்றும் அவரது இராணுவம் அட்மிரல் டி லனாய் தலைமையிலான டச்சு இராணுவத்தை எதிர்கொண்டது. கடுமையான போரின் இறுதியில் வீரத்தளபதி அனந்த பத்மநாபன் நாடாரின் தலைமையிலான படைகள் பல உயிரிழப்புகளுக்கு நடுவே வெற்றி பெற்றது. மேலும் அவர்கள் அட்மிரல் டி லானோய் உட்பட பல டச்சு அதிகாரிகளை உயிருடன் சிறைபிடித்தனர். இப்போரில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த 108 நாடார் ஆசான்களின் துணைக் கொண்டு அனந்த பத்மநாப நாடார் தலைமையிலான ராணுவம் டச்சுப் படையினரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனந்த பத்மநாபன் நாடாரின் திறமையான போர் உத்திகள் மற்றும் தலைமைத்துவம் ஆகியவை டச்சுக்காரர்களை தோற்கடித்து பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

நவீன ஆயுதங்கள்

வெள்ளையரின் அதிநவீன ஆயுதம் ஏந்திய போர்க்கப்பல்கள் மற்றும் துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதத்திற்கு முன்னாள் வேல்கம்பு, வாள் மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் ஒருவருக்கு எதிர்த்து மோதுவதற்கு திறமையும் துணிச்சலும் வேண்டும். அது 17ஆம் நூற்றாண்டிலேயே முதன்முதலில் மாவீரர் அனந்த பத்மநாப நாடாருக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குளச்சல் வீரன் பட்டம்

ஆக டச்சு இராணுவத்தின் தோல்விக்கு காரணமான, அனந்த பத்மநாபன் நாடார் இப்பகுதியில் ஒரு ஹீரோவானார். மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் அவருக்கு “குளச்சல் வீரன்” (குளச்சலின் வீரன்) என்ற பட்டம் வழங்கப்பட்டது. தனது ஆட்சியைக் காப்பாற்றிய அனந்த பத்மநாபன் நாடாருக்கு, மார்த்தாண்டவர்ம நாடார் ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கியதற்கான செப்புப்பட்டயங்கள் பல உள்ளது.

குளச்சல் போரில் வெற்றி பெற்றதற்காக அவரை பாராட்டி அவர் பெயரில் பல நினைவிடங்களை அமைத்த மன்னர் மார்த்தாண்ட வர்மன், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரைச் சூட்டியதோடு குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயரை இவரை கவுரவிக்கும் விதமாக சூட்டினார். பிற்காலத்தில் அவரின் வெற்றியை பறைசாற்றும் வரலாற்று சுவடுகள் அயல் இனத்தவர்களால் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

ஏப்ரல் 16,2013 அன்று நாளேடுகளில் வெளியிட்ட அறிக்கையில் அனந்த பத்மநாப நாடாருக்கு தச்சன்விளையில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy: H.Raja

read more
சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance

சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக் கருதப்படுகிறது மற்றும் வைகுண்டரின் அவதார நடவடிக்கைகளின் முதன்மை மையமாகும்.

ஈத்தங்காடு என்னும் ஊர் நாகர்கோவில் – குமரி சாலையில், சுசீந்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. பயணத்தில் சாமித்தோப்பை அடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த அழகிய கிராமம், இந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள சுவாமி அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப்பதியாகத் திகழ்கிறது.

முத்திரி கிணறு :

அய்யா வைகுண்டரின் தருமபதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்ட பிறகே தருமபதிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். எந்தவித வேறுபாடும் இன்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்காக அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய பொதுக்கிணறுதான் இந்த முத்திரிக் கிணறு.


முத்திரி என்றால், ‘உத்தரவாதம் தருதல்’ அல்லது ‘நியமித்தல்’ என்று பொருள். அய்யா வைகுண்டரின் தருமபதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் முத்திரிக் கிணறு இருக்கும்.

தர்மபதி:

முத்திரிக் கிணற்றில் புனித நீராடிவிட்டு, அய்யா வைகுண்டரின் தருமபதியை நோக்கிச்சில அடிகள் எடுத்து வைத்ததும், தகதகக்கும் பொன்வாசல் பளிச்சிடும். உள்ளே நுழைந்த உடன் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை “சிவசிவ சிவசிவா அரகர அரகரா” என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும்.. முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம்.
கொடிமரத்தைக் கடந்து தியான மண்டபத்தை அடைந்ததும், அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.

பொதுவாக, கோயில்களில் தெய்வங்களை அழகுத் திருமேனிகளில் பார்த்துப் பழக்கப் பட்டிருப்போம். ஆனால், இங்கே அய்யா வைகுண்டரின் திருமேனி முற்றிலும் வித்தியாசமானது. ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.

நிலைக் கண்ணாடி:

நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி இருக்கிறது. ‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. அதனாலேயே இப்படியரு வழிபாட்டு முறை! நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே! ‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’ என்பதும் அய்யா வைகுண்டரின் வாக்கு.

உருவ வழிபாடு வேண்டாம் என்பது அய்யா வைகுண்டரின் விருப்பம் என்பதால், அதன்படியே சாமித்தோப்பு உள்ளிட்ட அய்யா வைகுண்டரின் எல்லாத் தருமபதிகளிலும் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.

பள்ளியறை தரிசனம் முடித்ததும், மறுபடியும் தியான மண்டபம் வழியாக வந்து, தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.

தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப் படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை.

தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். தேங்காயை இங்கே உடைப்பது உயிர்ப் பலி கொடுப்பதற்குச் சமம் என்பதால், அப்படிச் செய்வதில்லை. கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.

அப்படியென்றால், தருமபதிக்கு வரும்போது என்னதான் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா?

வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை, அவற்றைக் கொண்டு வருவோருக்குத் திரும்பத் தரப்படமாட்டாது. மாறாக, இப்படி எல்லா பக்தர்களும் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களும் வழிபாட்டுக்குப் பிறகு, பிரசாதமாக அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.

‘காணிக்கை வேண்டா(து)ங்கோ…’
என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… ‘உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்’ என்பதுதான்.

‘தருமம் செய்து தழைத்திருங்கோ…’
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தரும் பக்தர்கள் இங்கு நிறையப் பேர்.

அய்யா வைகுண்டரைத் தேடி வந்து வழிபட்டால், நாம் நினைத்ததைச் சத்தியமாய் நிறைவேற்றித் தருவார் நம் அய்யா. அனைவரும் சாமித்தோப்பு சென்று அய்யா வைகுண்டரின் திருப்பாதம் பணிந்து வணங்கி, அவர் அருள்பெற்று வருவோம்!

Source: Uvari Media

read more
சமுதாய செய்திகள்

நாடார் பற்றிய குதர்க்கமான கேள்விக்கு தமிழச்சி HCL ரோஷினி நாடாரின் அசத்தலான பதில்

HCL Roshini with Shiv Nadar

யார் இந்த ரோஷினி?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மூலைப்பொழி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட HCL நிறுவனர் ஷிவ் நாடார் அவர்களின் ஒரே புதல்வி இந்த ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ஆகும்.

யோகன் என்ற பத்திரிகையாளர்: இந்தியாவிலேயே பணக்கார பெண்ணாக உயர்ந்திருக்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் உங்களுடைய பெயரில் இருக்கும் ஜாதியை ஏன் விடவில்லை..?.

ரோஷினி நாடார்: இதை ஒரு ஜாதியாக நான் கருதவில்லை. இதை என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். நாடார் என்பது எங்கள் இன குழுக்களின் அடையாளம். என்னுடைய அப்பாவின் உடைய பெயராக கருதுகிறேன், ஆம் என்னுடைய முன்னோர்களின் பெயராக கருதுகிறேன்.

இந்த அடையாளத்தை வைத்து என்னை எளிதாக கண்டுகொள்ள முடியும், நான் எந்த பகுதியை சேர்ர்ந்தவள், என்னுடைய உணவு பழக்கம் என்ன?, என்னுடைய வழிபாட்டு முறை என்ன?, என்னுடைய முன்னோர்களுடைய வாழ்வியல் முறை என்ன?, எங்கள் குழுக்கள் உடைய தொழில் என்ன? என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆக ஜாதி என்பது ஒருவருடைய அடையாளம். ஆம், எம் முன்னோர்கள் எங்களுக்கு விட்டு சென்ற அடையாளத்தை நான் அழிக்க விரும்பவில்லை..

ஜாதி என்பது ஒரு இனக்குழு, ஒரே மாதிரியான தொழிலை செய்த ஒரு மக்கள் கூட்டம் ஒரு பொதுவான பெயரில் ஒரே கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள் என்னும் நிலையில் அந்த குழுவினுடைய பெயரை வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

HCL Founder Shiv Nadar with Roshini
HCL ஷிவ் நாடார் தனது மகள் ரோஷினியுடன்

HCL ரோஷ்ணி நாடார் பற்றி தெரியாத தகவல்கள்

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 11.8 பில்லியன் டாலர் HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனத்திற்கு வழிகாட்டு யுக்திகளை வழங்குவதற்கு பொறுப்பானவர். 40 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கொண்ட முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான HCL டெக்னாலஜிஸின் தலைவராகவும், அதன் CSR வாரியக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

ரோஷ்னி ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். அதன் ஆரம்ப காலத்தில், நாட்டை வளர்ச்சி பாதைக்கும், மாற்றத்தை உருவாக்கும் தலைமையிலும் 1.1 பில்லியன் டாலர்களை ஷிவ் நாடார் அறக்கட்டளை முதலீடு செய்தது.

மேலும் ரோஷ்னி, தலைவராகவும் VidyaGyanன் பின் ஒரு உந்து விசையாகவும் இருக்கிறார்: அது உத்திரபிரதேசத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய, தகுதிவாய்ந்த, கிராமப்புற மாணவர்களுக்கான தலைமைத்துவ அகாடமி, கிராமப்புற இந்தியாவில் இருந்து வருங்கால தலைவர்களை வளர்ப்பதற்காக உழைத்து வருவதோடு, நாடு முழுவதும் அவர்கள் தங்கள் சமூகங்கள், கிராமங்கள் மற்றும் தேசம் ஆகியவற்றிற்கு மாற்றத்தின் ஊக்கியாக இருக்க முடியும்.

வனவிலங்குகள் மற்றும் அதன் பாதுகாப்பில் ஆர்வமுள்ள ரோஷ்னி, 2018 ஆம் ஆண்டில் வாழ்விடம் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை இந்தியாவின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் அதன் பூர்வீக இனங்கள் உருவாக்கும் முக்கிய நோக்கம் மற்றும் பொருத்தமான செயல் திட்டங்ககளின் மூலம் நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் ஒவ்வொரு மட்டத்திலும் ஒத்த கருத்துள்ள அனைவருடன் ஒத்துழைப்புடன்.

ரோஷ்னி அமெரிக்காவின் எம்ஐடி இன்ஜினியரிங் பள்ளியில் Dean’s ஆலோசனைக் குழுவில் உறுப்பினர் மற்றும் ஆசியாவிற்கான கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் எக்ஸிகியூட்டிவ் போர்டு உறுப்பினராகவும் உள்ளார். அவர் அமெரிக்கா -இந்தியா வியூகக் கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) இயக்குநர்கள் குழுவில் பணியாற்றுகிறார். மேலும் HDFC Asset Management நிறுவனத்தின் குழுவில் ஒரு சுயேச்சை இயக்குநராக உள்ளார்.

HCL Roshini Nadar
HCL ரோஷ்ணி நாடார்

வணிகம் மற்றும் மனிதாபிமானம் ஆகிய இரண்டிலும் அவரது சிறந்த பணியை அங்கீகரிக்கும் வகையில், ரோஷ்னி பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவற்றில் சில ‘உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள்’ பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது. 2021 இல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட Forbesஇன் ‘உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள்’ பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் அவரை ‘ஆசியாவின் 25 சக்திவாய்ந்த பிசினஸ் பெண்கள்’ பட்டியலில் சேர்த்தது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிந்தனைக் குழுவான (Horasis)ஹோராசிஸ், 2019 ஆம் ஆண்டின் இந்திய வணிகத் தலைவராக அங்கீகரித்தது. அவர் இளம் உலகளாவிய தலைவர்களின் மன்றத்தின் (YGL, 2014-19) முன்னாள் மாணவர் ஆவார், இந்த அமைப்பு ஒரு தனித்துவமான மற்றும் பலதரப்பட்ட சமூக உலகின் பெரும்பாலான, அடுத்த தலைமுறை தலைவர்கள், World Economic Forumயின் ஒரு முயற்சி.

2018 ஆம் ஆண்டில், தேசிய விருது பெற்ற நிலா மதாப் பாண்டா இயக்கிய ‘ஹல்கா’ என்ற குழந்தைகள் திரைப்படத்தை ரோஷ்னி தயாரித்தார். இந்தப் படம் திறந்தவெளியில் மலம் கழித்தல் பிரச்சினையை எதிர்த்துப் போராடும் ஒரு குடிசைவாழ் குழந்தையின் வித்தியாசமான பயணத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர் 2019 முதல், அனிமல் பிளானட் /டிஸ்கவரி சேனலுக்காக இந்தியாவில் மிகவும் அழிந்து வரும் உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ‘ஆன் தி பிரின்க் ’ என்ற ஒரு தொலைக்காட்சி தொடரையும் தயாரித்து வருகிறார்.

ரோஷ்னி Northwestern Universityயில் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் இளங்கலை மற்றும் Kellogg School of Managementல் எம்பிஏ பட்டமும் பெற்றவர். At Kellogg, அவருக்கு Dean’s சிறப்பான சேவை விருது .

ரோஷ்னி ஷிகர் மல்ஹோத்ரா என்பவரை மணந்தார், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

read more
சமுதாய செய்திகள்

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026 ஆண்டிற்கான தேர்தல்

Nellai Thoothukudi Nadar Mahamai Paripalana Sangam in Egmore, Chennai

சென்னை, மார்ச் 2-

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் இயங்கி வருகிறது. இந்த நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான புதிய சங்க நிர்வாகிகள் குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 1-ந் தேதி இரண்டு கட்டமாக நடைபெற்றது.

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சுமார் 16 ஆயிரம் பேர் இந்த சங்கத்தில் பதிவு பெற்று வாக்காளர் தகுதி உடையவர்களாக இருந்து வருகின்றனர். இந்த தேர்தலில் 41 புதிய உறுப்பினர்கள் பகுதிவாரியாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 41 நிர்வாக உறுப்பினர்களும் சேர்ந்து புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்யும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது.

பத்மநாதன் (எ) பாஸ்கர் நாடார் நெல்லை-தூத்துக்குடி நாடார் சங்க தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி பெற்ற சான்றிதழ்

இதில் போரூர் ஆனந்தராஜ் தலைமையில் நாடார் ஒரு அணியும், டி.பத்மநாபன் நாடாரை தலைவராகக் கொண்டு மற்றொரு அணியும் களம் இறங்கின. மொத்தமுள்ள 41 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் போரூர் ஆனந்தராஜ் நாடாருக்கு ஆதரவு தெரிவித்தனர். டி பத்மநாபன் நாடாருக்கு 19 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலான சங்கத்தின் தேர்தலில் போரூர் ஆனந்தராஜ் நாடார் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புதிய தலைவராக போரூர் ஆனந்தராஜ் நாடார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பொது குழு கூட்டத்தில் பொறுப்பெடுக்கிறார்கள். பொதுக்குழு தேதியை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் அதிகாரியாக ஆர் செல்வகணேசன் செயல்பட்டு தேர்தலை நடத்தி முடித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.

உமரிக்காட்டை சேர்ந்த பத்மநாதன் (எ) பாஸ்கர் நாடார்

மேலும் உமரிக்காட்டை சேர்ந்த எஸ்.பத்மநாதன் அவர்கள் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னைவாழ் உமரிக்காடு நாடார்கள் நல சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் துணைத்தலைவராக வெற்றி பெற்ற பத்மநாதன் (எ) பாஸ்கரை படத்தில் காணலாம்.

ராஜதந்திரமா? அதோடு மார்ச் 1ல் நடந்த நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபால சங்க நிர்வாகிகள் தேர்தலில் “அ.விக்கிரமராஜா அணியுடன் மயிலை பெரியசாமியின் மகன் சந்திரசேகர் அணி கூட்டு சேர்ந்துள்ளது. இந்த சந்திரசேகர் அணி தான் கடந்த தேர்தலில் விக்கிரமராஜா ரூ13 கோடி சங்க பணத்தை எடுத்து ஊழல் செய்து விட்டார். மீட்பு குழு அமைத்து அ.விக்கிரமராஜா அடித்த பணத்தை மீட்போம் என சவால் விட்டபடி பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அந்த ஊழல்வாதியுடன் இவர்கள் கைகோர்த்து உள்ளார்கள் பதவிக்காக சோரம் போய்விட்டார்கள் என்றும் இந்த அரசியல் கோமாளித்தனத்தை நடுநிலையான சமுதாய மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு தரப்பினர் குமுறுகிறார்கள்.

read more