close

அன்றாட நிகழ்வுகள்

தூத்துக்குடி மாவட்டம்

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் 11-02-2023 நடைபெறுகிறது

Smart Card Correction-Special Camp in Tuticorin
தூத்துக்குடி, பிப் 10 ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை பிப் 11ம் தேதி சிறப்பு முகாம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற பிப் 11ஆம் தேதி நாளை
read more

ஊர் கோவில்கள்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் – ஜனவரி 2023

Sri Kottai Val Ayyan Temple Maha Kumbabhishek Invitation February 2023 - Page 1
உமரிக்காடு, ஜன 19- அன்புடையீர் வணக்கம், பொருநை நதியின் வடகரையில் அமைந்துள்ள உமரி மாநகரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பழம் பெறும் கோயிலும், பக்தர்களின் குறைகளை பரிவுடன் நிவர்த்தி செய்து அருள் புரியும் ஸ்ரீ
read more
- Advertisement P1-

Latest Views

சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance

சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக் கருதப்படுகிறது மற்றும் வைகுண்டரின் அவதார நடவடிக்கைகளின் முதன்மை மையமாகும்.

ஈத்தங்காடு என்னும் ஊர் நாகர்கோவில் – குமரி சாலையில், சுசீந்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. பயணத்தில் சாமித்தோப்பை அடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த அழகிய கிராமம், இந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள சுவாமி அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப்பதியாகத் திகழ்கிறது.

முத்திரி கிணறு :

அய்யா வைகுண்டரின் தருமபதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்ட பிறகே தருமபதிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். எந்தவித வேறுபாடும் இன்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்காக அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய பொதுக்கிணறுதான் இந்த முத்திரிக் கிணறு.


முத்திரி என்றால், ‘உத்தரவாதம் தருதல்’ அல்லது ‘நியமித்தல்’ என்று பொருள். அய்யா வைகுண்டரின் தருமபதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் முத்திரிக் கிணறு இருக்கும்.

தர்மபதி:

முத்திரிக் கிணற்றில் புனித நீராடிவிட்டு, அய்யா வைகுண்டரின் தருமபதியை நோக்கிச்சில அடிகள் எடுத்து வைத்ததும், தகதகக்கும் பொன்வாசல் பளிச்சிடும். உள்ளே நுழைந்த உடன் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை “சிவசிவ சிவசிவா அரகர அரகரா” என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும்.. முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம்.
கொடிமரத்தைக் கடந்து தியான மண்டபத்தை அடைந்ததும், அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.

பொதுவாக, கோயில்களில் தெய்வங்களை அழகுத் திருமேனிகளில் பார்த்துப் பழக்கப் பட்டிருப்போம். ஆனால், இங்கே அய்யா வைகுண்டரின் திருமேனி முற்றிலும் வித்தியாசமானது. ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.

நிலைக் கண்ணாடி:

நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி இருக்கிறது. ‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. அதனாலேயே இப்படியரு வழிபாட்டு முறை! நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே! ‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’ என்பதும் அய்யா வைகுண்டரின் வாக்கு.

உருவ வழிபாடு வேண்டாம் என்பது அய்யா வைகுண்டரின் விருப்பம் என்பதால், அதன்படியே சாமித்தோப்பு உள்ளிட்ட அய்யா வைகுண்டரின் எல்லாத் தருமபதிகளிலும் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.

பள்ளியறை தரிசனம் முடித்ததும், மறுபடியும் தியான மண்டபம் வழியாக வந்து, தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.

தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப் படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை.

தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். தேங்காயை இங்கே உடைப்பது உயிர்ப் பலி கொடுப்பதற்குச் சமம் என்பதால், அப்படிச் செய்வதில்லை. கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.

அப்படியென்றால், தருமபதிக்கு வரும்போது என்னதான் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா?

வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை, அவற்றைக் கொண்டு வருவோருக்குத் திரும்பத் தரப்படமாட்டாது. மாறாக, இப்படி எல்லா பக்தர்களும் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களும் வழிபாட்டுக்குப் பிறகு, பிரசாதமாக அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.

‘காணிக்கை வேண்டா(து)ங்கோ…’
என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… ‘உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்’ என்பதுதான்.

‘தருமம் செய்து தழைத்திருங்கோ…’
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தரும் பக்தர்கள் இங்கு நிறையப் பேர்.

அய்யா வைகுண்டரைத் தேடி வந்து வழிபட்டால், நாம் நினைத்ததைச் சத்தியமாய் நிறைவேற்றித் தருவார் நம் அய்யா. அனைவரும் சாமித்தோப்பு சென்று அய்யா வைகுண்டரின் திருப்பாதம் பணிந்து வணங்கி, அவர் அருள்பெற்று வருவோம்!

Source: Uvari Media

read more
Nellai Thoothukudi Nadar Mahamai Paripalana Sangam in Egmore, Chennai
சமுதாய செய்திகள்

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026 ஆண்டிற்கான தேர்தல்

சென்னை, மார்ச் 2- சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் இயங்கி வருகிறது. இந்த நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான புதிய சங்க நிர்வாகிகள் குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 1-ந்
read more
Lord Murugan Dharisanam Kavadi Street Umarikadu, Tuticorin
ஊர் திருக்கோவில்கள்

அருள்மிகு முருகன் திருக்கோயில், காவடி தெரு, உமரிக்காடு

இந்த முருகன் கோவில் தூத்துக்குடியில் உள்ள உமரி மாநகரில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. முருகன் கோவில் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது மற்றும் அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபடலாம் மற்றும் வழிபடுபவர்களுக்கு மோசமான அதிர்வுகளிலிருந்து பலம் கிடைக்கும்.
read more
சென்னைவாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம்

சென்னை உமரிக்காடு சங்கத்தின் மாதாந்திர கூட்ட நிகழ்ச்சி நிறைவு நிரல் – பிப் 2023

சென்னை, பிப் 21- நேற்று நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் கொட்டிவாக்கம் A.முருகன் தலைமையில் நடைபெற்றது. பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் ஐந்தாவது சீட்டு ஏலம் விடப்பட்டது. சங்க நிர்வாகம் குறிப்பு: சீட்டு பணம் கொடுக்காதவர்கள் வரும் 25ம்
read more
ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயனின் கும்பாபிஷேக சிறப்பு திருவுருவப்படம் மற்றும் பை வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட உமரிக்காடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக பைகள் மற்றும் ஐயனின் திருவுருவம் பதித்த புகைப்படம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அவற்றை அதிகாலையில் நடந்த கோவில் குடமுழுக்கை தரிசிப்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும்
read more

The latest

சமுதாய செய்திகள்

நாடார் மகாஜன சங்க உருவாக்கத்தில் பொறையார் கம்பெனி எஸ்டேட் பங்கு

Nadar Mahaja Sangam Members Met in Poraiyar Company Garden at 1910
The Nadars, have descended from the lost dynasty of the Pandya kings. They belong to the proud Kshatriya race, and the social degradation they faced in previous centuries has been solely due to oppression by the ruling losses that followed the Pandyas. Persecution made the Nadars seek their living as palmyra climbers and toddy toppers
read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு

Nadar House in Tranquebar
பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு கி.பி 1790 ஆண்டில் இருந்து தொடங்குகிறது. தவசுமுத்து நாடாரின் எஸ்டேட்டில் 7000 ஏக்கர்க்கு மேல் விவசாய நிலங்கள் இருந்தது, இதை தொடர்ந்து, தவசுமுத்து நாடாரின் குடும்பம் மக்களால் “நாடார் எஸ்டேட்” என்று அழைக்கப்பட்டது.
read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

அரியலூர் ஜமீன்தாரிகளின் வரலாறு

Zamindars Controlled Places in Tiruchirappalli District
அரியலூர் ஜமீன் திருச்சி மாவட்டத்தின் கிழக்கிலும், கொல்லிடம் ஆற்றின் வடக்கிலும் அமைந்துள்ளது. ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் சலுகை பெற்ற ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
read more
ஊர் திருக்கோவில்கள்

அருள்மிகு முருகன் திருக்கோயில், காவடி தெரு, உமரிக்காடு

Lord Murugan Dharisanam Kavadi Street Umarikadu, Tuticorin
இந்த முருகன் கோவில் தூத்துக்குடியில் உள்ள உமரி மாநகரில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. முருகன் கோவில் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது மற்றும் அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபடலாம் மற்றும் வழிபடுபவர்களுக்கு மோசமான அதிர்வுகளிலிருந்து பலம் கிடைக்கும்.
read more
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்

உமரி ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலிற்கு புதிய கட்டிடம் கட்டும் திருப்பணிக்கான ஆலோசனை கூட்டம் – 02.04.2023

அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான வணக்கம், ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமி சன்னதியில் வைத்து இன்று, ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலின் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடர்பான ஆலோசனை
read more
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு அ.பெருமாள் நாடார் காலமானார் – 19.03.2023

A.Perumal Nadar Passed Away Funeral at Umarikadu - March 2023
பெ.செந்தில் குமரன் அவர்களின் தந்தை திரு அ.பெருமாள் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மார்ச் 19ஆம் நாள் இயற்கை எய்தினார்கள். அண்ணாரது
read more
சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance
சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக்
read more