close
சமுதாய செய்திகள்

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026 ஆண்டிற்கான தேர்தல்

Nellai Thoothukudi Nadar Mahamai Paripalana Sangam in Egmore, Chennai
சென்னை எழும்பூரில் உள்ள நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க கட்டிடம்

சென்னை, மார்ச் 2-

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் இயங்கி வருகிறது. இந்த நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான புதிய சங்க நிர்வாகிகள் குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 1-ந் தேதி இரண்டு கட்டமாக நடைபெற்றது.

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சுமார் 16 ஆயிரம் பேர் இந்த சங்கத்தில் பதிவு பெற்று வாக்காளர் தகுதி உடையவர்களாக இருந்து வருகின்றனர். இந்த தேர்தலில் 41 புதிய உறுப்பினர்கள் பகுதிவாரியாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 41 நிர்வாக உறுப்பினர்களும் சேர்ந்து புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்யும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது.

பத்மநாதன் (எ) பாஸ்கர் நாடார் நெல்லை-தூத்துக்குடி நாடார் சங்க தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி பெற்ற சான்றிதழ்

இதில் போரூர் ஆனந்தராஜ் தலைமையில் நாடார் ஒரு அணியும், டி.பத்மநாபன் நாடாரை தலைவராகக் கொண்டு மற்றொரு அணியும் களம் இறங்கின. மொத்தமுள்ள 41 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் போரூர் ஆனந்தராஜ் நாடாருக்கு ஆதரவு தெரிவித்தனர். டி பத்மநாபன் நாடாருக்கு 19 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலான சங்கத்தின் தேர்தலில் போரூர் ஆனந்தராஜ் நாடார் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புதிய தலைவராக போரூர் ஆனந்தராஜ் நாடார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பொது குழு கூட்டத்தில் பொறுப்பெடுக்கிறார்கள். பொதுக்குழு தேதியை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் அதிகாரியாக ஆர் செல்வகணேசன் செயல்பட்டு தேர்தலை நடத்தி முடித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.

உமரிக்காட்டை சேர்ந்த பத்மநாதன் (எ) பாஸ்கர் நாடார்

மேலும் உமரிக்காட்டை சேர்ந்த எஸ்.பத்மநாதன் அவர்கள் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னைவாழ் உமரிக்காடு நாடார்கள் நல சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் துணைத்தலைவராக வெற்றி பெற்ற பத்மநாதன் (எ) பாஸ்கரை படத்தில் காணலாம்.

ராஜதந்திரமா? அதோடு மார்ச் 1ல் நடந்த நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபால சங்க நிர்வாகிகள் தேர்தலில் “அ.விக்கிரமராஜா அணியுடன் மயிலை பெரியசாமியின் மகன் சந்திரசேகர் அணி கூட்டு சேர்ந்துள்ளது. இந்த சந்திரசேகர் அணி தான் கடந்த தேர்தலில் விக்கிரமராஜா ரூ13 கோடி சங்க பணத்தை எடுத்து ஊழல் செய்து விட்டார். மீட்பு குழு அமைத்து அ.விக்கிரமராஜா அடித்த பணத்தை மீட்போம் என சவால் விட்டபடி பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அந்த ஊழல்வாதியுடன் இவர்கள் கைகோர்த்து உள்ளார்கள் பதவிக்காக சோரம் போய்விட்டார்கள் என்றும் இந்த அரசியல் கோமாளித்தனத்தை நடுநிலையான சமுதாய மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு தரப்பினர் குமுறுகிறார்கள்.

Tags :சென்னை நாடார் சங்கம்நிர்வாகிகள் தேர்தல்நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம்

Leave a Response