close
ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் – ஜனவரி 2023

Sri Kottai Val Ayyan Temple Maha Kumbabhishek Invitation February 2023 - Page 1
ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் பிப்ரவரி 2023 - பக்கம் 1

உமரிக்காடு, ஜன 19-

அன்புடையீர் வணக்கம்,

பொருநை நதியின் வடகரையில் அமைந்துள்ள உமரி மாநகரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பழம் பெறும் கோயிலும், பக்தர்களின் குறைகளை பரிவுடன் நிவர்த்தி செய்து அருள் புரியும் ஸ்ரீ கோட்டைவாழ் ஐயன் திருக்கோவிலில் நிகழும் மங்களகரமான 1198-ஆம் ஆண்டு சுபகிருது வருடம் தை மாதம் 27-ம் தேதி(10-02-2023) வெள்ளிக்கிழமை பஞ்சமி திதியும், ஹஸ்தம் நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6:45 மணிக்கு மேல் 7:45 மணிக்குள் கும்ப லக்னத்தில் புனரவர்த்தன ஜீரணோத் தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து விழாவில் கலந்து கொண்டு ஐயனை தரிசித்து அவரின் திருவருள் பெற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
கிராம விவசாயிகள் சங்கம் – உமரிக்காடு
Tags :கோட்டை வாழ் ஐயன் திருக்கோயில்மஹா கும்பாபிஷேகம்

Leave a Response