close
ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயனின் கும்பாபிஷேக சிறப்பு திருவுருவப்படம் மற்றும் பை வெளியீடு

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் கும்பாபிஷேக சிறப்பு விநியோகம்

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட உமரிக்காடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக பைகள் மற்றும் ஐயனின் திருவுருவம் பதித்த புகைப்படம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அவற்றை அதிகாலையில் நடந்த கோவில் குடமுழுக்கை தரிசிப்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்தும் பெரும்திரளாக வந்திருந்த பக்தகோடிகள் மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

அய்யனின் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உமரிக்காடு கிராம மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags :ஐயன் திருவுருவப்படம்கும்பாபிஷேகம்

Leave a Response