close
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்

உமரி ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலிற்கு புதிய கட்டிடம் கட்டும் திருப்பணிக்கான ஆலோசனை கூட்டம் – 02.04.2023

அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான வணக்கம்,

ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமி சன்னதியில் வைத்து இன்று, ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலின் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி 2023 ஆண்டு ஞாயிற்றுக்கிழமை இனிதே நடைபெற்று முடிந்தது.

கூட்டத்தில் முன் வைத்த கோரிக்கைகளின் படியாக ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோவிலின் புதிய கட்டிடம் கட்டும் உத்தமத்திருப்பணியை அடுத்து வரும் திருநாட்களில் துரிதமாக மேற்கொண்டு முடிக்க வேண்டும் எனவும், அதன் தொடர்ச்சியாக பிறகு கும்பாபிஷேக திருப்பணியை சிறப்பாக நிறைவேற்றவும் பாத்தியப்பட்ட மூன்று குடும்பத்திலிருந்தும் தலா நான்கு பேர் என்ற முறையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

வெ.மூ வகையறா குடும்பத்தில் இருந்து பின்வரும் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

  • திரு.ப. இராஜசேகரன் அவர்கள்,
  • திரு ந.கோட்டாளம் அவர்கள்,
  • திரு S.சத்தியசீலன் அவர்கள்,
  • திரு சி.சரவணன் அவர்கள்,

மேலும் தலைக்கட்டு வரியாக ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு வரி செலுத்தலாம் எனவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் அம்பாளின் திருப்பணி கும்பாபிஷேகம் உட்பட தோராயமாக பதினைந்து லட்சம் வரை செலவு செய்யலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான மதிப்பீடு முறையே அடுத்து வரும் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்து தெரிவிப்பார்கள். நம்மால் முடிந்த நன்கொடைகளை தந்து அம்பாளின் திருவருளை பெற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

Tags :ஆலோசனை கூட்டம்

Leave a Response