இன்று இந்து அன்னையர் முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் ஏப்ரல் 09ஆம் நாள் 2023 ஆண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் உமரிக்காடு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் மாணவ மாணவிகள் வரும் பள்ளி முழு ஆண்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று வேண்டி ஹயக்ரீவர் பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஹயக்ரீவர் பூஜை மந்திரத்தை சொல்லியும், உறுதிமொழி எடுத்தும், கல்வி அறிவை வளர்க்க வேண்டி வழிபாடு செய்தனர். அனைவருக்கும் அம்மனின் திருவருள் பெற்ற கயிறு கைகளில் கட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், தாய்மார்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரி பிரபாகர் ஏற்பாடு செய்து நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
இந்து அன்னையர் முன்னணி பின்னணி என்ன?
இந்து மத கோட்பாடுகளை தாங்கும் ஒரு தத்துவார்த்த தலைமைதான் ஆர்.எஸ்.எஸ். இந்த ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கீழ் சங்பரிவார், விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி என நாடு முழுக்க பல்வேறு பெயரில் பல்வேறு அமைப்புகள் உள்ளது. அதன் அரசியல் கட்சியாக இருப்பது தான் பாரதிய ஜனதா கட்சி. அவற்றில் ஒன்றான இந்து முன்னணியில் அன்னையர் முன்னணி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்து அன்னையர் முன்னணியின் மாநில தலைவர் கடேஸ்வரா சி.சுப்ரமணியம், மாநில துணைத்தலைவர் கு.பூசப்பன், மாநில பொதுசெயலாளர் சி.பரமேஸ்வரன் ஆவார்கள்.

