close
ஸ்ரீ ஆற்றங்கரை மேலக்கோவில் சுவாமிகள்

ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமிகள் மேலக்கோவில் கொடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம் – புரட்டாசி 2022

Aatrangarai Swamigal Mela Kovil Kodai Festival Preparations Progress Photo 2022
சுடலை ஈசன்

உமரிக்காடு, அக் 8-

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமி மேலக்கோவில் புரட்டாசி கொடை விழா நாளை மறுநாள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உமரிக்காட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் தங்கள் இன முன்னோர்களை வழிபடும் வகையில் ஸ்ரீ ஆத்தங்கரை சுவாமி கோவில் கொடை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உமரிக்காட்டில் வருகிற 11ஆம் தேதி நடைபெறும் ஸ்ரீ ஆத்தங்கரையான் கோயில் கொடை விழாவிற்காக கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும் வண்ணம் தீட்டும் பணிகள், அலங்காரம் என பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆற்றங்கரையான் சுவாமி மேல குலதெய்வகோயிலில் விக்ரகம் கிடையாது. இங்கு நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளின் படி ஒவ்வொரு சுவாமிகளுக்கும் என்று தனித்தனியே பீடங்கள் உள்ளன. அவைகளுக்கு தனித்தனி பூஜைகள் நடைபெறும் இது முதல் பங்காளி வகையறாகளுக்கான குலதெய்வம் ஆகும்.

சக்தி பீடம்

மேலும் திருமணமாகாதவர்கள் இந்த கோவிலில் பூ முடித்துப் பார்த்து நேர்த்திக்கடன் வேண்டி செல்வார்கள். பிறகு திருமணமான பின் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இதே போல திருமணம் ஆனவர்கள் குழந்தை வரம் வேண்டி, தொட்டில் நிறுத்திக் கடன் வேண்டி அமைத்து, குழந்தை பிறந்தவுடன் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் கோவில் திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதே போல் முக்கிய கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் கூட்டம் கடந்த காலங்களை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புரட்டாசி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை கொடை விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த புரட்டாசி கொடை விழாவை காண தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இதே போல் ஸ்ரீ ஆத்தங்கரை அம்மன் கோவிலுக்கு இந்தாண்டு புரட்டாசி கொடை விழாவிற்கு தங்கள் குல முன்னோர்களை வழிபடுவதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.

அதேபோல ஆற்றங்கரை சுவாமி கோயில் அருகே பெண்கள் உடை மாற்றும் அறையை கட்ட வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சில நேர்த்திக்கடன்களை செலுத்த தாமிரபரணி ஆற்றங்கரையில் குளித்துவிட்டு பின்னர் நேர்த்திக்கடனை தொடங்குவார்கள் மேலும் சில பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து பின் சாமி தரிசனம் செய்வார்கள். தாமிரபரணி ஆற்றில் குளித்து பெண்கள் உடை மாற்றும் வரை இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு பெண்கள் கோவில் அருகில் உள்ள மரத்தின் மறைவில் உடைமாற்றுகின்றனர். இதனால் ஆற்றில் குளிக்கும் பெண்கள் உடை மாற்ற மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஆகையால் கோவில் நிர்வாகம் சார்பில் தாமிரபரணியாற்றங்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் கோயிலுக்கு அருகில் போதிய தண்ணீர் வசதி மற்றும் கழிப்பிடம் அமைக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புரட்டாசி கொடை விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

#மாயாண்டி_சுடலையீசனே_போற்றி

Tags :கொடை விழா

Leave a Response